அட கடவுளே.. காய்கறி வாங்க ₹10 கேட்டது குத்தமா... மனைவியை விவாகரத்து செய்த ஆண்..

காய்கறிகள் வாங்குவதற்கு வெறும் 30 ரூபாய் கேட்ட மனைவிக்கு கணவன் முத்தலாக் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Jul 1, 2019, 01:35 PM IST
அட கடவுளே.. காய்கறி வாங்க ₹10 கேட்டது குத்தமா... மனைவியை விவாகரத்து செய்த ஆண்.. title=

காய்கறிகள் வாங்குவதற்கு வெறும் 30 ரூபாய் கேட்ட மனைவிக்கு கணவன் முத்தலாக் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் தாதர் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய சயினப் என்ற பெண், தன் கணவரிடம் காய்கறிகள் வாங்குவதற்காக ரூ.30 கேட்டுள்ளார். ஆனால் அவரது கணவர் முத்தலாக் மூலம் விவாகரத்து வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கணவர் உட்பட மற்ற குடும்ப உறுப்பினர் அனைவரையும் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட சயினப் இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளித்த புகாரில் “ கடந்த சனிக்கிழமை மாலை என் கணவர், அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் தாய் ஆகியோர் என்னை கடுமையா தாக்கினர். அவர்கள் வயர்களின் மூலம் எலக்ட்ரிக் ஷாக்கும் கொடுத்தனர். என்னை முத்தாலக் மூலம் விவாகரத்து செய்த கணவர், என் முகத்தில் உமிழ்ந்து என்னை வீட்டை விட்டு துரத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர் சபீர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது குடும்ப வன்முறை தொடர்பான பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து சபீரை கைது செய்த போலீசார், அவரை தாத்ரி நகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தினர். ஆனால் அவர் நேற்று ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார், மற்ற குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகி விட்டனர். 

முஸ்லீம்களின் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் தங்கள் மனைவியிடம் 3 முறை தலாக் என்ற சொல்லை உச்சரித்தால், விவாகரத்து ஆகிவிட்டது என்று அர்த்தம். இந்த முத்தலாக் முறை பயனற்ற, சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து முத்தலாக் தடை சட்ட மசோதாவை சட்டமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News