கோயில்களில் ஆபாச சிலைகள் இருப்பதற்கான காரணம் இதுதான்.!

கோயில்களில் ஏன் ஆபாச சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்ற கேள்விகள் பலருக்கும் எழும் நிலையில் இது தொடர்பான சில கருத்தை பார்க்கலாம். 

Written by - Dayana Rosilin | Last Updated : May 28, 2022, 08:33 PM IST
  • கோயில்களில் உள்ள ஆபாச சிலைகள்
  • எதற்காக வைக்கப்பட்டது என்ற தேடல்
  • முன்னோர்களின் அறிவு சார் சிந்தனை
கோயில்களில் ஆபாச சிலைகள் இருப்பதற்கான காரணம் இதுதான்.! title=

கோயில்கள் புனிதமானவை. கோயிலுக்குள் போகும்போது அசுத்த எண்ணமோ அல்லது அறுவருப்பான சிந்தனையோ இருக்கக்கூடாது என கூறுவார்கள். பிறகு ஏன் கோயில் கட்டடங்களில் அபாசமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விகள் இருந்துகொண்டேதான் வருகிறது.  இங்கு கேள்வி என்னவென்றால் கோயிகள் புனிதமானவைதான் அதேபோல மனித குலத்தை உருவாக்கும் பாலியல் சக்தி மட்டும் எப்படி அசுத்தமானதாக இருக்கும் என்பதே. பிரபஞ்சத்தின் குறியீடாக உள்ள மனிதர்களை உருவாக்கும் ஒரு செயல் எதன் அடிப்படையில் அசுத்தமாக்கப்பட்டது என்பதே. ஒரு மனிதனின் உடலில், கண், காது, மூக்கு என இருக்கும் ஒவ்வொரு உருப்புகளும் அதனதன் வேலையை சரியாக செய்வதால் மட்டுமே மனிதர்களால் உயிர் வாழ முடிகிறது. அப்படி இருக்கும்போது பாலியல் சார்ந்த உறுப்புக்கள் மட்டும் ஏன் இங்கு ஆபாசமானதாக பார்க்கப்படுகிறது. 

Temple Statue

கோயில்களில் ஆபாசச் சிலைகள் மட்டும் இல்லை. மனித வாழ்கையின் ஒவ்வொரு அத்யாயத்தையும் கூறும் சிற்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. இவற்றில் உடலுறவுச் சிலைகளும், காமம் சார்ந்த சிலைகளும் அடங்கும். ஆனால் அவற்றை எல்லாம் கண்களுக்கு புலப்படாமல் காமம் சார்ந்த சிலைகளும், அதன் மீதான தவறான சிந்தனைகளும்தான் மேலோங்குகிறது. அதன் அடிப்படை உண்மை என்னவென்றால் மனிதர்களுக்கு காமத்தின் மீதான தேடல் மேலோங்கி இருக்கிறது என்றே பொருள். மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவைதான் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களும். அந்த கோயில்களில் நடன கலைஞர்கள், சிற்பக்கலைஞர்கள் என கலை சார்ந்த ஏராளமானோர் பணியாற்றி இருக்கிறார்கள். அன்று வாழ்ந்த கலைஞர்களுக்கும், கோயிகளுக்கு வந்து சென்ற நம் முன்னோர்களுக்கும், மன்னர்களுக்கும் நடனம் எப்படி ஒரு கலையாக கண்களுக்கும் அறிவுக்கும் புலப்பட்டதோ அதேபோல, பாலியல் தொடர்பான சிற்பங்களும் கலையாகவே தென்பட்டிருக்கலாம். 

Temple Statue pic

இங்கு நாம் யோசிக்க வேண்டியது அறிவு சார்ந்த சமூகமாக வாழ்ந்தது நம் முன்னோர்களா? அல்லது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நவீன கால கட்டமா? கலையை வெறும் காமமாக மட்டும் பார்க்கும் இந்த நூற்றாண்டில் பாலியலை செல்போன்களில் மறைமுகமாக பார்த்து அதை பிஞ்சு குழந்தையிடம் காட்டி துண்புறுத்தவே கற்றுக்கொடுத்து வருகிறது. ஆனால் அன்று அதை ஒரு புனித செயலாக கருதி கடவுள்களின் சிலை வைக்கப்படும் அதே கோயில்களில் குழந்தைகளும், பெரியவர்களும் பார்த்து புரிந்துகொள்ளும் வண்ணம் வெளிப்படையாக வைக்கப்பட்டு உணர்வுகள் மதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சாதனைகள்

செல்வ செழிப்போடு வாழ்வாய் என வாழ்த்தும் நம் பெரியோர்கள் அந்த செல்வத்தினை இரண்டு வழிகளில் மட்டுமே பார்த்தார்கள். ஒன்று விவசாயத்தின் மூலம் நிலத்தில் இருந்து மற்றொன்று பாலியல் மூலம் குழந்தைகளாக பெண்ணிடம் இருந்து. நிலத்தை பெண்ணோடு ஒப்பிட்டு பார்க்க பாலியல் என்ற விவசாயமே காரணமாக இருக்கிறது. உணவு இல்லாமல் ஒரு மனிதனால் எப்படி வாழ முடியாதோ அதேபோல பாலியல் இல்லாமல் பிரபஞ்சமுலம் இருக்காது. நம் முன்னோர்களின் ஆன்மீகம் என்பது மூட நம்பிக்கைகள் நிறைந்தது அல்ல அதில் ஆயிரம் உள்ளோட்டமான கருத்துக்கள் உள்ளன.  அறிவதும் அறிதலின் மூலம் கடந்து செல்வதுமே ஆன்மீகத்தின் முன்நகர்வு என்பதை அவர்கள் நன்று புரிந்து வாழ்ந்துள்ளார்கள். 

Temple Statue picture

ஆகவேதான் காமத்தினை அறிவின் வழியாக உணர்ந்து அதன் உச்சநிலையை புரிந்து அவற்றின் சிலைகளை வடிவமைத்திருக்கிறார்கள். கட்டிப்போடும் நாயும் சரி, மறைத்து வைக்கும் காமமும் சரி ஒரு கட்டத்தில் வெறி பிடித்த குணத்தையே எட்டி தொடும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. காமம் ஏன் என அறிந்து, அதை புரிந்து, பிறருக்கு புரிய வைத்து, அதை கடந்து செய்வதே, தெய்வீகமான ஞானத்தின் பாதை என குறிப்பவையே கோயில்களில் உள்ள பாலியல் கல் வெட்டுகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை. 
குறிப்பாக ஆண்களின் Penis செயல் ஆற்றலாகவும், பெண்களின் Vagina விளைவு ஆற்றலாகவும் கருத்தில் கொண்டு பிரபஞ்சத்தின் எதிர்மாரான கருத்து X ஆற்றல் என்பதைப் உணர்ந்து கொண்டவர்கள் முன்னோர்கள். அவர்களால் ஆன்மீகத்தில் அதிக தொலைவு முன்னகர முடிந்தது..! நம்மால்..??? 

மேலும் படிக்க | குழந்தைகளை ஏன் தனியறையில் தூங்க வைக்க வேண்டும்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News