Weight Loss Journey: உடல் எடை குறைப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் பலரும் தொடர்ந்து பேசி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டர் ரீவா பூஜாரி என்பவர் தனது உடல் எடை குறைப்பு அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
உடல் எடை குறைப்பு குறித்து பல்வேறு ரீல்ஸ்களை பதிவேற்றி வருகிறார். அந்த ரீல்ஸ்களில் உடல் எடை குறைப்புக்கு அவர் பின்பற்றிய உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். உடல் எடையை குறைக்கும் போது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.
Weight Loss Journey: 48 கிலோவை குறைத்தது எப்படி?
மேலும் அவரது வீடியோ ஒன்றில், தான் எப்படி 123 கிலோ உடல் எடையை, 75 கிலோவாக குறைத்தேன் என்பது குறித்து விளக்கி உள்ளார். இந்த 48 கிலோவை குறைக்க தனக்கு எவை உதவியது, எவை உதவவில்லை என்பதை அதில் தெரிவித்துள்ளார்.
Weight Loss Journey: ரீவா பூஜாரி தவிர்த்த உணவுகள்
மேலும், அவர் தவிர்த்த உணவுகள் அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார். சோடா கலந்த குடிபானங்கள், பர்கர், பீட்சா, கப் கேக்ஸ், டோநட்ஸ், புரோட்டீன் பார்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரட், கோதுமை, பருப்பு போன்றவற்றையும் அவர் தவிர்த்ததாக கூறுகிறார். மேலும், சில மனிதர்களையும் அவர் தவிர்த்ததாகவும், நீங்களும் தவிர்க்குமாறும் அவர் நகைச்சுவை கலந்த அறிவுரையாக குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: சாப்பிட வேண்டிய உணவுகள்
மேலும் அவர் என்னவெல்லாம் சாப்பிட்டார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். சிக்கன், மீன், கிரீக் யோகர்ட், அவகாடோஸ், இளநீர், பழங்கள், பெரீஸ், அரிசி, நட்ஸ், காய்கறிகள், கொண்டைக்கடலை, பட்டாணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவை அவரின் உணவுப் பழக்கவழக்கத்தில் முக்கியமானவையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: ரீவா பூஜாரி பகிர்ந்த டிப்ஸ்
மேலும், உடல் எடையை குறைப்பதற்கும், மன அமைத்திக்கும் அவர் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டுளஅளார்.
- காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது.
- சாப்பாட்டுக்கு முன் இசப்கோல் உமி கலந்த வெந்நீரை குடிப்பது. இசப்கோல் உமி என்பது ஒரு வகை மூலிகை.
- நம் மனதை கஷ்டபடுத்திவிட்டு, அதை நகைச்சுவை என சிரிக்கும் நண்பர்களின் பழக்கத்தை முதலில் கைவிடுங்கள்
- தினமும் 8 மணிநேரம் நன்றாக தூங்குங்கள்.
- சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
- உணவுப் பழக்கவழக்கத்தில் கூட தடம் மாறலாம். ஆனால், காதல் உறவிலோ, திருமண உறவிலோ, உடற்பயிற்சியிலோய தடம் மாறவே கூடாது.
- உங்களுக்கு என தனியான பழக்கம் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். (உதாரணத்திற்கு புத்தகம் படிப்பது, கவிதை எழுதுவது)
- உங்களின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீதும் நம்பிக்கை இருக்கட்டும். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ரீவா பூஜாரியின் தனிப்பட்ட கருத்தாகும். இதனை பின்பற்றும் முன்னர் நீங்கள் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ