இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆனது Graduate Engineer Trainee (HCL) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
HCL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate Engineer Trainee பணிக்கென மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
Mining – 39 பணியிடங்கள்
Survey – 02 பணியிடங்கள்
Geology – 06 பணியிடங்கள்
Concentrator – 06 பணியிடங்கள்
Electrical – 11 பணியிடங்கள்
Civil – 05 பணியிடங்கள்
Mechanical – 12 பணியிடங்கள்
Instrumentation – 02 பணியிடங்கள்
System – 01 பணியிடம்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Engineering Degree, MBA, MCA, IT, Post-Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HCL விண்ணப்பக்கட்டணம்:
General, OBC & EWS – ரூ.500
மற்றவர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மேலும் படிக்க | இந்த மோதிரத்தை அணிந்தால் உத்யோகத்தில் நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும்
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | SBI Card நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ