பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. கருப்பு பண ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானார்கள். இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியான பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அந்த தாக்கத்தில் இருந்து இன்றளவும் மக்களால் மீள முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரமும் பெரும் சரிவைக் கண்டு, அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி கொடுத்த எச்சரிக்கை!
இத்தகைய சூழ்நிலையில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் தாள்களை இப்போது வெளிநாட்டினர் மட்டும் மாற்றிக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதியளித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக அனுமதியை பயன்படுத்தி பழைய ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என பலரும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அந்த தகவல் உண்மையில்லை. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு போன்று போலி தகவல் சமூக ஊடகங்களில் உலாவ விடப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலானோர் உண்மையென நம்பியிருந்தால் அது தவறு.
— PIB Fact Check (@PIBFactCheck) March 6, 2023
மத்திய நிதியமைச்சகம் சார்பில் அத்தகைய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இது போலி தகவல் குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) உண்மை தன்மையை வெளியிட்டது. இப்போது சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என மறுப்பு தெரிவித்திருக்கும் பிஐபி, வெளிநாட்டு குடிமக்களுக்கான இந்திய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதி 2017 ஆம் ஆண்டே முடிவடைந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்பதேவையில்லை. எப்போதும் இதுபோன்ற தகவல்களை படித்தாலும் அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் ஏமாற வாய்ப்புகள் உள்ளன. செய்தி ஊடகங்கள் மற்றும் அருகில் இருக்கும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு நேரடியாக சென்று உண்மை தன்மையை தெரிந்து கொள்ளுங்கள். இப்போது ஆன்லைனில் வழியாக எந்தவொரு செய்தியின் உண்மை தன்மையையும் உடனடியாக அறிந்து கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | இரவு நேர ரயிலில் பயணம் செய்கிறீர்களா... இந்த செய்தி உங்களுக்குத்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ