காதல் உறவில் இருப்பவரா நீங்கள்? அப்போ ‘இந்த’ 4 உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

காதல் உறவில் இருப்பவர்கள், 4 உண்மைகளை தெரிந்து கொண்டால் அவர்களின் வாழ்க்கையே மாறி விடும்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 2, 2023, 07:47 PM IST
  • காதல் உறவு நமக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
  • இதனால் நம் வாழ்வில் பல மாற்றங்கள் உருவாகலாம்.
  • பிறரை காதலிப்பதற்கு முன்னர் நம்மை நாமே காதலிப்பது சிறந்தது.
காதல் உறவில் இருப்பவரா நீங்கள்? அப்போ ‘இந்த’ 4 உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்! title=

எந்த மனிதை உறவை எடுத்துக்கொண்டாலும் அதில் பிரச்சனைகளும் சவால்களும் இருந்து கொண்டேதான் இருக்கும். உறவுகள், நம் வாழ்விற்கு புது அர்த்தத்தையும் ஏற்படுத்தும். சில சமயங்களில், காதல் உறவுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகள் நம் வாழ்க்கையையே மாற்றி விடும். அவை என்னென்ன தெரியுமா?

1.காதல் இயற்கையாகவே மலர்கிறது:

உண்மையான காதல் வெறும் ஈர்ப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இது பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் வெளிபாடாக இருக்கும். காதலின் அழகே, அது இயற்கையாக வரும் முறையை பொருத்துதான் உள்ளது. காதல் உறவில் இருக்கும் இருவருக்குள்ளும் சரியான புரிதலும், மரியாதையும் இருக்க வேண்டும். எதை செய்தாலும் இருவரும் மனம் ஒத்து செய்ய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே காதலில் உள்ள அன்பு நீடித்து நிற்கும். 

2.சந்தேகங்கள் உறவை வலுப்படுத்தும்:

காதல் உறவில் சில சமயங்களில் சந்தேகங்கள் எழுவது சகஜம். அது ஆழ்ந்த சந்தேகமாகவும் இருக்கலாம் அல்லது செல்லமாக ஏற்படும் சந்தேகமாகவும் இருக்கலாம். இது, உங்களது காதல் உறவை பலப்படுத்த உதவும். இதனால் உறவில் இருக்கும் இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ளவும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளவும் நேரிடும். இதனால் உங்களுக்கு உணர்ச்சியினால் ஏற்பட்ட விரிசல் சரியாகும். முன்னர் இருந்ததை விட, காதல் உறவு மேலும் பலப்படும். 

மேலும் படிக்க | மாதவிடாய் பிரச்சனையா..? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்!

3.காதல் மட்டும் போதாது..

காதல் உறவில் அன்பு அடித்தளமாக இருந்தாலும், அந்த உறவை நிலைநிறுத்துவதற்கு கொஞ்சம் அதிகமான முயற்சிகள் தேவைப்படுகின்றன. நிலைத்தன்மை, முதிர்ச்சி மற்றும் வாக்குறுதிகளுடன் செயல்களின் சீரமைப்பு ஆகியவை உறவை நிலைநிறுத்த தேவைப்படுகிறது. அசைக்க முடியாத ஆதரவு, புரிதல் மற்றும் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளின் மூலம் உறவை வளர்ப்பதற்கான முயற்சிகள் மூலம் உங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும். காதல் என்பது உணர்வுபூர்வமான தொடர்பு மற்றும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கலவையாகும்.

4.உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுதல்..

நாம் நம்மை எப்படி பார்த்துக்கொள்கிறோமோ, எப்படி நம்மிடம் பேசுகிறோமோ அப்படிதான் பிறரிடமும் நடந்து கொள்வோம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தவறை செய்து விட்டீர்கள் என்றால் உங்களை எப்படி திட்டிக்கொள்வீர்களோ அப்படித்தான் பிறரையும் மனதிற்குள்ளோ அல்லது வெளிப்படையாகவோ திட்டுவீர்கள். எனவே, உங்களை நீங்கள் முதலில் காதலிக்க தொடங்குகள். அப்படி செய்தால் மட்டுமே நீங்கள் இன்னொருவரை காதலிக்க தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு, உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தல், உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுதல், உங்கள் மீது அன்பு செலுத்துதல் போன்ற விஷயங்களை செய்ய வேண்டும். சுய புரிதல் இருப்பதும் அவசியம். 

மேலும் படிக்க | சூடான நீர் அல்லது குளிர்ந்த நீர்? முடிக்கு எந்த தண்ணீர் பயன்படுத்துவது நல்லது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News