Apple Benefits: பொதுவாக பழங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் அதிக சத்துள்ள பழமாக கருதப்படுகிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆப்பிள் சாப்பிட்டால் ரத்தம் உற்பத்தி அதிகரிக்கும் என்று சிறுவயதில் இருந்தே படித்து வந்து இருப்போம். ஆப்பிளில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால், இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை கொடுக்கிறது. ஆப்பிளில் வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, வைட்டமின் கே, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன.
மேலும் படிக்க | மாரடைப்பு வரும் முன் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: அலர்டா இருங்க மக்களே!!
தினமும் காலையில் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து ஆப்பிளை சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் மதிய உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடலாம். ஆப்பிளை வெறும் வயிற்றில் சாப்பிடுட கூடாது. இவை ஜீரணிக்க கடினமாக இருக்கும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவற்றில் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் செரிமானத்திற்கு பெரிதும் உதவும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் ஆப்பிளை தினசரி சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை முற்றிலும் குறையும்.
ஆப்பிள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. இவற்றை வேலை பார்க்கும் போதும், விளையாட செல்லும் போதும் சாப்பிட்டால் கூடுதல் சக்தியை தரும். குறிப்பாக ஆப்பிளை எப்போதும் அதன் தோலுடன் சாப்பிட வேண்டும். ஒரு சிலர் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகின்றனர். இதனால் போதிய ஆற்றல் உடலுக்கு கிடைப்பதில்லை. தினசரி ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் தோல் ஆரோக்கியம் மேம்படுகிறது. முகத்திற்கு கூடுதல் பளபளப்பை தருகிறது. சருமம் உள்ளே இருந்து ஆரோக்கியமாக மாறி, பொலிவை அதிகரிக்கிறது. மேலும் ஆப்பிள் நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இவற்றில் சர்க்கரை இருந்தாலும், பெரிதாக ரத்த சர்க்கரை அளவை பாதிப்பதில்லை. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
இதுதவிர, ஆப்பிள்கள் புற்றுநோயை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் உடல் வீக்கம், இருதய நோய் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவும். ஆப்பிளில் உள்ள சத்துக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு பங்களித்து, உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை குறைகின்றன. ஆப்பிளை அப்படியே சாப்பிடாமல் அதனை மற்ற காய்கறிகள் மற்றும் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம். புரூட் சாலட், ஆப்பிள் ஜூஸ், ஸ்குவாஷ் போன்ற வடிவிலும் சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ