யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யுபிஎஸ்சி ) மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் காலியாகவுள்ள பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
1) நிறுவனம் :
மத்திய தடய அறிவியல் ஆய்வகம் (சிஎஃப்எஸ்எல்)
2) காலி பணியிடம் :
01
3) பணி :
ஜூனியர் சயின்டிஃபிக் ஆபீசர் (ஜேஎஸ்ஓ)
4) வயது வரம்பு :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!
5) சம்பளம் :
நிலை-07 (ரூ.44900 முதல் ரூ.142400 வரை)
6) வேலைவகை :
மத்திய அரசு (நிரந்தரம்)
6) கல்வி தகுதிகள் :
- இயற்பியல் அல்லது அப்லைட் இயற்பியல் அல்லது கணினி அறிவியல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அல்லது தடயவியல் அறிவியல் போன்ற பிரிவுகளில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இளங்கலை பொறியியல் (B.E) அல்லது பி.டெக்(சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேஷன் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன்) அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்அல்லது தகவல் தொழில்நுட்பம் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
7) முன் அனுபவம் :
மத்திய அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பணிகளில் ஏதேனும் நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்களில் 3 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தடய அறிவியல் ஆய்வகத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது நல்லது.
8) விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் - ரூ. 25.
விண்ணப்பக் கட்டணத்தை ஸ்டேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் பணமாகவோ அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் நெட் பேங்கிங் அல்லது விசா அல்லது மாஸ்டர் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ செலுத்த வேண்டும். மேலும் SC/ST/PwBD/ சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
9) விண்ணப்பிக்கும் செயல்முறை :
www.upsconline.nic.in. என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள https://upsconline.nic.in/ora/ என்கிற லிங்கில் லாக் இன் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
10) தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க | எல்ஐசியில் வேலை வாய்ப்பு - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ