நீங்களும் எச்.டி.எஃப்.சி பங்குகளில் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதன்படி மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்.டி.எஃப்.சி, தற்போது 2021-22 நிதியாண்டில் அதன் பங்குதாரர்களுக்கு 1550 சதவீதம் அதாவது ரூ.15.50 ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உண்மையில், மார்ச் காலாண்டில் வங்கி 23% நிகர லாபம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.டி.எஃப்.சி வங்கி முக்கிய தகவல்
இந்த நிலையில் எச்.டி.எஃப்.சி வெளியிட்ட இந்தத் தகவளின் படி, மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த நிதியாண்டின் நிகர லாபத்தில் அதன் முதலீட்டாளர்களுக்கு 1 பங்குக்கு ரூ.15.50 ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்து. மேலும் இந்த முடிவானது அடுத்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக்
தகுதி நிர்ணய காலக்கெடு
மே 13, 2022, ஈக்விட்டி பங்குகளில் ஈவுத்தொகை பெற உரிமையுள்ள உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயிக்கும் தேதியாக வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உண்மையில், நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்.டி.எஃப்.சி, மார்ச் காலாண்டில் ஒரே அடிப்படையில் நிகர லாபத்தில் 23 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில், எச்.டி.எஃப்.சி வங்கியில் அதன் தாய் நிறுவனமான எச்.டி.எஃப்.சி லிமிடெட் இணைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, வங்கியின் பங்கு விலையில் தொடர்ந்து விற்பனை இருந்து வருகிறது.
மேலும் படிக்க | VISTARA வழங்கும் அசத்தல் சலுகை; இன்றே விமான டிக்கெட்டுகளை புக் செய்யவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR