Coconut Hair Mask: பெண்களுக்கு தங்களது முடியின் மீது அதிக அக்கறை இருக்கும். நீளமாக முடி வளர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர். ஏனெனில் பெண்களுக்கு நீண்ட முடி இருந்தால் அவர்களின் அழகை மேலும் அதிகப்படுத்துகிறது. எனவே நீளமாக முடி வளர பல வீட்டு வைத்தியங்களையும், பியூட்டி பார்லர்களுக்கும் செல்கின்றனர். இருப்பினும் சிலருக்கு எந்த சிகிச்சைகளும் பலனளிப்பதில்லை. காரணம் கடைகளில் விற்கப்படும் எந்த ஒரு அழகு சாதன பொருட்களும் முடி வளர்ச்சிக்கு உதவுவதில்லை. மேற்கொண்டு அதில உள்ள ரசாயனங்கள் முடிக்கு தீங்கு தான் விளைவிக்கின்றன. இவை முடிக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே பெண்களுக்கு முடி வளர்ச்சியை அதிகப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | டூத்ப்ரஷ் பயன்படுத்தாமலே பற்கள் வெண்மையாக இருக்க சில வழிகள்!
முடியின் மயிர்கால்களுக்கு போதுமான சக்தி கிடைக்காததால் முடி உதிர்வு ஏற்படுகிறது. எனவே சிலர் முடிக்கு மசாஜ் செய்கின்றனர். இதன் மூலம் மயிர்கால்களுக்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. இதுவும் ஒருவகையில் சரியான விஷயம் தான். அதே சமயம் தலை முடிக்கு மசாஜ் செய்ய மற்ற பொருட்களை விட தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது அதிக நன்மை பயக்கும். இது உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவை முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. அதே போல வெறும் தேங்காய் எண்ணெய் தடவாமல் அதில் பால் மற்றும் வாழைப்பழம் சேர்த்து ஹேர் மாஸ்க்காக தடவி வந்தால் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் தயாரிக்க தேங்காய் எண்ணெய்யில் பால் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றைப் சேர்க்கலாம். இந்த மூன்று விஷயங்களும் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இதற்கு முதலில் வாழைப்பழத்தை தேங்காய் எண்ணெயில் பிசைந்து அதில் பால் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்யவும். பிறகு இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி சுமார் ஒரு மணி நேரம் காய விடவும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் தேன் கூட சேர்த்து கொள்ளலாம். இந்த பேஸ்ட் நன்றாக காய்ந்தவுடன் ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவவும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை முறை தடவி வந்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.
முடி வளர்ச்சி
பொதுவாக தேங்காய் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டது. இதனை முடிக்கு தடவுவதன் மூலம் இது உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தைத் நிலைநாட்டுகிறது. இது தவிர, தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முடியை வேரில் இருந்து சுத்தம் செய்கிறது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் முடியை உள்ளே இருந்து ஊட்டமளிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் வாழைப்பழத்தை சேர்ப்பதன் மூலம் முடியை பளபளப்பாக வைத்திருக்கும் சில பண்புகள் கிடைக்கின்றன. பால் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மறுப்பு: அன்புள்ள வாசகரே, இந்தச் செய்தியைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதை உங்களுக்கு கொடுக்க வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் எடுத்துள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
மேலும் படிக்க | சாப்பிட்ட பிறகு பல் துலக்கலாமா? மருத்துவரின் அறிவுரை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ