Budget 2025: APY, NPS, UPS, EPS... பட்ஜெட்டில் ஓய்வூதியத் திட்டங்களில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Union Budget 2025: ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசாங்கம் பட்ஜெட்டில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. APY, NPS, EPS மற்றும் UPS தொடர்பான பெரிய முடிவுகள் பட்ஜெட்டில் வெளிவரலாம் என கூறப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 28, 2025, 02:21 PM IST
  • பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்.
  • ஓய்வூதியத் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்புகள்.
  • தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7500 ஆக உயர்த்தப்படலாம்.
Budget 2025: APY, NPS, UPS, EPS... பட்ஜெட்டில் ஓய்வூதியத் திட்டங்களில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் title=

Union Budget 2025: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பலதரப்பட்ட மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பெண்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், விவசாயிகள், வணிகர்கள், வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் பிரத்யேகமான சில கோரிக்கைகள் உள்ளன.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசாங்கம் பட்ஜெட்டில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் ஊழியர் ஓய்வூதிய நிதி, தேசிய ஓய்வூதிய முறையின் மூலம் கிடைக்கும் ஓய்வூதியம், அடல் ஓய்வூதியத் திட்டம் என அனைத்து விதமான ஓய்வூதியத் திட்டங்களிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. APY, NPS, EPS மற்றும் UPS தொடர்பான பெரிய முடிவுகள் பட்ஜெட்டில் வெளிவரலாம் என கூறப்படுகின்றது.

Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்

இந்த முறை மத்திய பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7500 ஆக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகின்றது. ஓய்வூதியம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். ஏனெனில் தற்போது அவர்களுக்கு மிகக் குறைந்த ஓய்வூதியம்தான் கிடைக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கின்றது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஜனவரி 10, 2025 அன்று நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் EPS-95 ஓய்வூதியதாரர்களின் குழு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தது. குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டது. 

2014 ஆம் ஆண்டு முதல், EPS-1995 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நீண்ட காலமாக, குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை (Minimum Monthly Pension) ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ஓய்வூதிய அமைப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அரசாங்கம் இதில் நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், 36.60 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் இன்னும் இந்த தொகையை விடக் குறைவான ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர்.

National Pension System: தேசிய ஓய்வூதிய முறை

தேசிய ஓய்வூதிய முறையில் முதலீடு செய்துள்ளவர்கள், பணி ஓய்வின் போது 40 சதவீத நிதியை NPS-இல் ஆண்டுத்தொகையாக (Annuity) முதலீடு செய்யும் நிபந்தனை உள்ளது. அது இந்த பட்ஜெட்டில் நீக்கப்படலாம் என கூறப்படுகின்றது. பட்ஜெட்டில் என்பிஎஸ் திட்டம் தொடர்பாக அரசாங்கம் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். 

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலும் இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிடலாம். இதற்கான வழிகாட்டுதல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஏப்ரல் 2025 முதல் யுபிஎஸ் அமலுக்கு வருகின்றது. OPS, NPS ஆகியவற்றில் உள்ள முக்கிய அம்சங்களை சேர்த்து, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் UPS அமைக்கப்ட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஊக்குவிக்க அரசாங்கம் பெரிய முடிவுகளை எடுக்கலாம். மத்திய அரசின் மாதிரியில் யுபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ள மாநிலங்களும் கேட்டுக்கொள்ளப்படலாம்.

Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம்

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். ஏழைகளுக்கும், அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களின் வயதான காலத்தில் ஓய்வூதியம் மூலம் நிதி உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(PFRDA) தொடக்கி வைத்தது. அடல் பென்ஷன் திட்டத்தில் இப்போது, ​குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உள்ளது. இந்த திட்டத்தின் ஓய்வூதியத் தொகையின் வரம்பை அரசு இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | UPS Update: 25 ஆண்டுகளுக்கு குறைவாக சர்வீஸ் உள்ளவர்களுக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?

மேலும் படிக்க | Budget 2025: இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை, பட்ஜெட்டில் வரப்போகும் மிகப்பெரிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News