அமெரிக்காவின் சுகாதார ஆலோசகர் குறித்த வீடியோ பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!!
கொரோனா வைரஸ் என்ற கொடிய நாவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 100,000-யை தாண்டியுள்ளது என்று சனிக்கிழமை (மார்ச்-7) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, சீனாவில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான்,சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், வியட்நாம், நேபாளம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு மற்ற விமானப் பயணிகளிடமிருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர். ஆனாலும், மக்களிடையே இந்த வைரஷின் பயம் மேலும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இருபினும் மக்களிடம் அனைத்து பாதுகாப்பு அமைச்சர்களும் தைரியத்தையும், நாம் செய்யக்கூடாத செயல்களைளையும் வழியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சுகாதார ஆலோசகர் குறித்த வீடியோ பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நெட்டிசங்களிடையே பெரும் எதிர்வினையை எட்டியுள்ளது. கொரொனா வைரஸ் அசுருத்தலுக்கு இடையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட சாண்டா கிளாரா கவுண்டி பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் சாரா கோடி (Sara Cody) சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்கள் வைரஸை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம், முகம், கண்கள் மற்றும் மூக்கைத் தொடக்கூடாது என்று கூறிய பின்னர் அவர் தனது விரலை வாயில் வைத்து சுவைத்தார். இதை தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரளாகியது.
அந்த வீடியோவில், மக்களே நீங்கள் உங்கள் முகத்தைத் தொடாதபடி வேலை செய்யத் தொடங்குங்கள். ஏனென்றால், வைரஸ் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடும் போது தான் எளிமையாக நமக்கு பரவுகிறது" என்றார். பின்னர், தனது அறிக்கையின் அடுத்த பக்கத்தை புரட்டுவதற்கு முன் தனது விரலை வாயில் வைத்தார். இந்த நிகழ்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்தியது. இந்த வீடியோ, ஆன்லைனில் பகிரப்பட்ட பிறகு, வைரலாகியது. மேலும், மக்கள் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. அந்த வீடியோ பதிவே கீலே இணைக்கபட்டுள்ளது.
இந்த வீடியோவிற்கு பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.