மாநில அரசு ஊழியர்களுக்கு நிம்மதி... மீண்டும் பழைய ஓய்வூதியம்!! விரைவில் அறிவிப்பு

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத்தை மீண்டும் தொடங்க ஹரியானா அரசு ஊழியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2023, 08:37 AM IST
  • மத்திய அரசு, குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி, 2004 ஜனவரி 1 முதல் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது.
  • இது தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என அழைக்கப்படுகிறது.
  • அதன் நோக்கம், ஓய்வூதிய பொறுப்புகளை செலுத்த நிதியை ஒதுக்குவதாகும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு நிம்மதி... மீண்டும் பழைய ஓய்வூதியம்!! விரைவில் அறிவிப்பு   title=

பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. 

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வரும் முடிவை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஓய்வூதியத்தை (Old Pension Scheme) மீண்டும் தொடங்க ஹரியானா அரசு ஊழியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக, அரசுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து முதல்வர் கட்டர் இப்போது முடிவெடுப்பார். அதன் கீழ் ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

மத்திய அரசு, குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி, 2004 ஜனவரி 1 முதல் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது. இது தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என அழைக்கப்படுகிறது. அதன் நோக்கம், ஓய்வூதிய பொறுப்புகளை செலுத்த நிதியை ஒதுக்குவதாகும். இல்லையெனில் இது ஒன்றாக கிளப் செய்யப்பட்டிருக்கும் அதன் சுமை பழைய ஓய்வூதியத் திட்டதின் கீழ் வரும் வரி செலுத்துவோர் மீது உள்ளது.

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: இவர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம், வந்தது அறிவிப்பு

ஹரியானா அரசு ஜனவரி 1, 2006 முதல் தேசிய ஓய்வூதிய திட்டத்தை (NPS-ஐ) ஏற்றுக்கொண்டது. NPS -க்கான அடிப்படைக் கோட்பாடுகள் அப்படியே இருக்கும். மாநில அரசு தற்போது ஊழியர்களின் ஓய்வூதிய பொறுப்புகளுக்கு 14% மாதாந்திர பங்களிப்பை செலுத்துகிறது. அதே நேரத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10% ஆகும்.

ஹரியானா சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், மெஹாம் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ பால்ராஜ் குண்டுவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் முதல்வர் மனோகர் லால் இதை பற்றி குறிப்பிட்டார். மத்திய அரசின் வழியையே மாநில அரசும் அவ்வப்போது பின்பற்றுகிறது என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு தேசிய ஓய்வூதியக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர சில நாட்களுக்கு முன்னர் ஒரு குழுவை அமைத்தது.  நிதித்துறை செயலர் தலைமையில் இந்த குழு செயல்படும். என்.பி.எஸ் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய வழிமுறை உருவாக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்போது அமலில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ஒழிக்க வேண்டும் என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதற்காக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் அவ்வப்போது ஒன்றாக இணைந்து போராடி வருகின்றனர். பல மாநில அரசுகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் இன்னும் இது குறித்து முடிவெடுக்காதது ஏன் என ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

 மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் கிடைக்குமா கிடைக்காதா? மாநில அரசு அளித்த மிகப்பெரிய செய்தி!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News