5 Healthy Weight Loss Drinks : உடல் எடை, எப்படி ஏறுகிறது என்பதே நமக்கு தெரியாது. ஆனால், அதை குறைப்பது மட்டும், அவ்வளவு கடினமான வேலையாக இருக்கிறது. இதற்காக எத்தனையோ பேர் எவ்வளவோ வெயிட் லாஸ் செய்தாலும், அதனுடன் சில ஆரோக்கியமான பானங்களை குடிக்க வேண்டும் என யோசிப்பர். அப்படி, பலர் குடிக்கும் பானமாக இருக்கிறது, கிரீன் டீ.
கிரீன் டீ:
கிரீன் டீ குடிப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்து கலோரிகள் உடலில் சேர விடாமல் தடுக்கும். மேலும், உடல் எடை இழப்பிற்கும் இது சரியான பானமாக இருக்கிறது. ஆனாலும், இந்த கிரீன் டீயை மட்டுமே தொடர்ந்து குடிக்க பலர் தயங்குகின்றனர். அவர்கள், விதவிதமான ஃப்ளேவர்களில் சில பானங்களை குடிக்க வேண்டும் என நினைக்கின்றனர். எப்போதும் இதையே குடித்து குடித்து மரத்து போன அவர்களின் நாக்கு, புதிதாக சில பானங்களை தேடுகிறது. அதே சமயத்தில் அந்த பானம் ஹெல்தியானதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். அப்படி, கிரீன் டீக்கு, உடல் எடையை வேகமாக குறைக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய 5 பானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இஞ்சி டீ:
காலையில் வெறும் வயிற்றில், இஞ்டி டீ குடிப்பது அல்லது சாப்பிட்ட பிறகு குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். அது மட்டுமல்ல, வயிற்றில் ஏற்படும் சில செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்து அழற்சி ஏற்படுவதையும் தடுக்கும். முந்தைய நாள் சாப்பிட்ட உணவு வயிற்றை கெடுத்தாலும், வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலும், இதனை குடிக்கலாம். வெறும் தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்தும் சாப்பிடலாம், அல்லது பால் டீயிலும் இஞ்சியை கொதிக்க வைத்து கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
புதினா டீ:
புதினா, உடலுக்கும் வாய்க்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் உணவாகும். இதனை பெரும்பாலான இந்திய இல்லங்களில் சமயலுக்கு பயன்படுத்துகின்றனர். ஹெவியாக சாப்பிட்ட பிறகு, புதினா டீயை குடிப்பதால், செரிமான பிரச்சனைகள் தீரலாம். புதினா டீ குடிப்பதால், வயிறு உப்பசம் ஆவது தடுக்கப்பட்டு, வயிறு லேசாக ஆகும். அதே போல, சாப்பிடுவதற்கு முன்னர் இதனை குடிப்பதால் அதீத பசி உணர்வு குறைந்து அளவாக சாப்பிட உதவும். இது, செரிமானத்திற்கு உதவும் தசைகளை சமன் செய்து, சாப்பிட்ட உணவுகள் எளிதில் ஜீரணிக்க உதவும்.
எலுமிச்சை டீ:
எலுமிச்சையை வைத்து டீ அல்லது சாதாரண தண்ணீராகவும் குடிக்கலாம். காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக எலுமிச்சை நீரை அல்லது எலுமிச்சை டீயை குடிப்பதால் உடலுக்கு மெட்டபாலிசம் கிடைக்கும். இது, உங்களை நாள் முழுவதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும். ஒரு சில முறை, தாகத்தை பசியென நினைத்து அதிகமாக சாப்பிடுவோம். அது போன்ற விஷயங்கள் ஏற்படாமல் தடுக்கிறது எலுமிச்சை நீர்.
ஆப்பிள் சைடர் வினீகர்:
ஆப்பிள் சைடர் வினீகர், இரத்த சர்க்கரை அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ட பின்னர் இன்சுலின் அளவுகள் ஏறலாம். இதனை கட்டுப்படுத்த, இந்த பானம் உதவும். அதே போல, உடலில் ஆங்காங்கே கொழுப்பு தங்குவதையும் இது நீக்கி விடும். கொழுப்பை கரைக்க, உடலில் கொழுப்பு சேராமல் தடுக்க இந்த ஆரோக்கிய பானத்தை குடிக்கலாம்.
மஞ்சள் டீ:
இயற்கையான மருந்துகளுள் ஒன்றாக விளங்குகிறது மஞ்சள். ரசம், தயிர் என பல்வேறு உணவுகளில் மஞ்சளை சேர்த்துக்கொள்கின்றனர். காரணம், இது கெட்ட பாக்டீரியாக்களை தடுக்கும் என்பதால். இதனை இயற்கை பானமாகவும் குடிக்கலாம். அப்படி குடிக்கும் போது மிளகை நுணுக்கி இதில் போட்டுக்கொள்ளலாம். இதனால் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்பும் குறையும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இந்த தகவல்களை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ