கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ பட டீசர்!!

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் டீசர்!!

Last Updated : Jun 1, 2018, 06:16 PM IST
கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ பட டீசர்!!  title=

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் டீசர்!!

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தில் நாயகியாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பொன்வண்ணன், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், சூரி, ஸ்ரீமன், செளந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். 2-டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யா இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். சென்னை, தென்காசி, காரைக்குடி பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. இந்தப் படம், ‘சின்ன பாபு’ என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸாக இருக்கிறது.

தற்போது, இப்படத்தின் அதிகாரபூர்வமான டீசர் ஜூன் 3-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். 

 

Trending News