COVID-19 தொற்றுநோய் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும் என்று WHO நம்புவதாக தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்..!!
தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முகமூடி அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி சோப்பிட்டு கைகளை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை நாம் கையாண்டு வருகிறோம். இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும் என்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜீபிரியாசிஸ் (Tedros Adhanom Ghebreyesus) கொஞ்சம் நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புவதாகவும் - 1918 காய்ச்சல் தொற்றுநோயை நிறுத்த இது எடுத்த நேரத்தை விட குறைவான நேரம்.
ALSO READ | COVID-19 தடுப்பு மருந்து: இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டும் ரஷ்யா!!
இது குறித்து டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில்... "உலகமயமாதால், நெருக்கம், தொடர்பில் இருத்தல் போன்றவை நமக்கு குறைபாடுகளாக உள்ளது. ஆனால் நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை உள்ளது. ஆகையால், இந்த கொரோனா தொற்றை நாம் 2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். தற்போது இருக்கும் யூக்திகளை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். கூடுதலாக கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் நாம் இந்த வைரசை 1918 ஆம் ஆண்டு உருவான ஸ்பானிஷ் புளூ முடிவடைந்த காலகட்டத்திற்கு முன்னரே இதை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம்’ என்றார்.
1918 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பானிஷ் புளூ என்ற வைரஸ் உலகையே உலுக்கி எடுத்தது. இந்த ஸ்பானிஷ் புளூவுக்கு உலகம் முழுவதும் 5 கோடி முதல் கோடி பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நீடித்தது. அதன் பின்னர் தான் இந்த கொடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மெல்ல உலகம் பழைய நிலைக்கு திரும்பியது. அதிகப்படியான தொழில்நுட்பம் மற்றும் தொடர்புகள் காரணமாக, கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். அதேசமயம், வைரஸை கட்டுப்படுத்துவதற்கான அறிவும், தொழில்நுட்பமும் கூட நம்மிடம் உள்ளதாக டெட்ரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.