உத்தரகாண்ட் தேர்தல்: 68 சதவீதம் வாக்குப்பதிவு

உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது.

Last Updated : Feb 16, 2017, 09:57 AM IST
உத்தரகாண்ட் தேர்தல்: 68 சதவீதம் வாக்குப்பதிவு title=

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது.

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சமோலி மாவட்டத்துக்கு உட்பட்ட கர்ணபிரயாக் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் குல்தீப் சிங் கன்வாசி கடந்த 12-ம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் மார்ச் 9-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

எனவே மீதமுள்ள 69 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு 628 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இங்கு நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், மாநிலம் முழுவதும் 68 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 

Trending News