திருப்பதி வரும் பக்தர்களுக்கு தினம் வழங்கப்படும் இலவச சிற்றுண்டியுடன், சட்னி சேர்த்து வழங்கும் திட்டத்தினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ளது!
உலகம் எங்கிலும் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாகவும், விசேஷ நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாலும், திருப்பதி வரும் பக்தர்கள் பட்டிகளில் அடைக்கப்பட்டு பின்னர் குழு குழுவாக தரிசணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இதனால், அன்னதான அறக்கட்டளை சார்பில் பட்டிகளில் உள்ளவர்களுக்கு இலவசமாக தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் பொங்கல், உப்புமா மற்றும் பால் போன்றவை வழங்கப்படுகிறது.
இந்த சிற்றுண்டிகளுடன் சட்னி வழங்கப்படுவதில்லை என்று விமர்சணம் வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ‘Dial Your E.O’ எனப்படும் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து பக்தர்கள் குறைகள் தெரிவித்துள்ளனர்.
இதனை பரிசீலித்த தேவஸ்தானம், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பக்தர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகளுக்கு சட்னியும் சேர்த்து விநியோகம் செய்துள்ளது.