மூன்று நாள் அரசுமுறை பயணமாக பாலஸ்தீனம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்.
பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்தார் மோடி. பாலஸ்தீனம் செல்லும் வழியில் அம்மான் நகரில் இறங்கி ஜோர்தான் மன்னரையும் பல நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
#WATCH: PM Narendra Modi arrives in Delhi after concluding his three nation visit to Palestine, UAE and Oman. pic.twitter.com/8UFM1RQgTk
— ANI (@ANI) February 12, 2018
Prime Minister Narendra Modi arrives at Palam airport in #Delhi after completing his visit to Palestine, UAE & Oman; received by EAM Sushma Swaraj pic.twitter.com/J95JSVHU7C
— ANI (@ANI) February 12, 2018
பின்னர், அபுதாபியில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உலக அரசாங்க மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளது. தொழில்நுட்பமும் கொள்கையுமே துபாயின் வெற்றிக்கு காரணம். தொழில்நுட்பம் தொடர்மாற்றங்களை சந்தித்து வருகிறது என்றார்.
மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று டெல்லி வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை அதிகாரிகள் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் வரவேற்றனர்.