தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று முகமது நபிகள் குறித்து நுபூர் சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமல்ல அரபு நாடுகளும் கூட தங்களின் எதிர்ப்பை வெளிப்படையாக பதிவு செய்தன. முகமது நபிகள் குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் அவமதிக்கும் வகையில் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அரபு நாடுகள், இந்தியா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தின.
இந்த விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வன்முறை வெடித்தது. அப்போது, காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக உதம்பூரில் நுபூர் சர்மாவின் பேச்சைக் ஆதரத்த டெய்லரை இருவர் படுகொலை செய்தனர்.
மேலும் படிக்க | ’ஹனிமூன் to ஹனுமன் ஹோட்டல்’ டிவிட்டர் பதிவுக்காக முகமது ஜூபைர் கைது - பின்னணி!
நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில், உயிருக்கு அசுற்றுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கக்கோரி நுபூர் சர்மா சார்பில் காவல்துறையிடம் முறையிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபூர் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நுபூர் சர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங், நுபூர் சர்மாவுக்கு கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதாகவும், அதனால் நாடு முழுவதும் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி சூர்ய காந்த், நுபூர் ஷர்மாவும் அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது. உதம்பூரில் நடைபெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு அவரது செயல்பாடுகளே காரணம் என கடுமையாக சாடினார்.
நுபூர்சர்மா மன்னிப்பு கேட்டதும், நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துக்களை திரும்பப் பெற்றது எல்லாம் மிகவும் கால தாமதமானது. நுபுர் சர்மாவிற்கு எதிராக பல எஃப்ஐஆர்கள் இருந்தபோதிலும் அவரை ஏன் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்படவில்லை? என சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், நுபுர் சர்மா தனது செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. நுபுர் சர்மா நடந்துகொண்ட விதம் அதன்பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கேடானது என காட்டமாக கூறிய நீதிமன்றம், ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதற்கு தனியாளாக நுபூர் சர்மா தான் காரணம். ஆனால் நிவாரணம் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அவர் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் கொடுத்திருக்கிறாரா? என கடுமையாக விளாசியது.
மேலும் படிக்க | இஸ்லாமியர்கள் போராட்டம்... வீடுகளை இடித்த யோகி ஆதித்யநாத் அரசு
தொலைக்காட்சி விவாதங்களில் அதன் பின்விளைவுகளை ஆராயாமல் பொறுப்பற்று பேசியிருப்பதாகவும், அதற்காக பதியப்பட்டுள்ள வழக்குகளை நுபூர்சர்மா எதிர்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நாட்டின் சட்டங்களை மதிக்காமல் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அந்த மனுவை நுபூர் சர்மா தரப்பு வழக்கறிஞர் திரும்பப்பெற்றுக் கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR