பிரதமரின் ஏழைகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 8 லட்சம் வேலை நாட்களை உருவாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
2020 அக்டோபர் மாதத்திற்குள், எட்டு மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களுக்காக 8 லட்சம் வேலை நாட்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சகம் செவ்வாய்கிழமையன்று தெரிவித்தது.
ALSO READ | கிண்டர் கார்டன் ஆன்லைன் வகுப்பில் கர்ஜிக்கும் புலிகள்… அசத்தும் கேரள ஆசிரியர்..!!
கொரோனா தொற்று பரவலால் புலம்பெயர்ந்த பல்வேறு தொழிலாளர்கள், வேலை வாய்ப்புகள் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் நிலையில், அவர்களுக்கு உதவிடும் வகையில் ஏழை மக்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், உயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஏழைகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அக்டோபர் 31 வரை, வேலை வழங்க 8 லட்சம் வேலை நாட்களை உருவாக்கும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும், ஏற்கனவே எட்டு மாநிலங்களில் உள்ள 116 மாநிலங்களில், இந்த திட்டத்தின் கீழ் 90,000 வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன எனவும் கூறியுள்ளார்.
Railways is providing employment to migrant workers under PM Garib Kalyan Rojgar Yojana.
So far, employment equal to 90,000 man-days has been generated at 138 railway sites.#AatmaNirbharBharat pic.twitter.com/Kbt06H7MRp
— BJP (@BJP4India) July 14, 2020
ஜூன் மாதம் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்த ஏழைகளுக்கான வேலைவாய்ப்பு திட்டம் என்பது இந்திய அரசின் ஏழைகளுக்கான நல மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ஏழைகளுக்கு பெரியளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒரு திட்டமாகும்.
ALSO READ | சீனா திரும்ப காத்திருக்கும் தமிழக பரோட்டா மாஸ்டர்கள்: சுவாரஸ்யமான மறுபக்கம்
கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் அதுதொடர்பான சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று உள்ளவர்களுக்கு, அடுத்த நான்கு மாதங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்குடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.