Railway Budget 2022: பிப்ரவரி 1, 2022 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டுடன் கூடவே ரயில்வேக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும் நிலையில், அதில் உள்ள எதிர்ப்பார்ப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில், மத்திய அரசு இந்த முறை ரயில்வேக்கான செலவினத்தை 15-20 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, ரயில்வே துறைக்கு, 1,10,055 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இம்முறை சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட்டை (Union Budget 2022) முன்னிட்டு, ரயில்வே தொடர்பான பல துறைகளில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த ஆண்டில் ரயில்வேக்கு ரூ.26,338 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி காலத்தில் வருவாய் இழப்புகளை சந்தித்த போதிலும், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ரயில்வே தனது வருவாயை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்த்து, வேறு விதமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ரயில் பட்ஜெட்டில் நீண்ட தூரப் பயணத்திற்காக சுமார் 10 புதிய இலகுரக ரயில்கள் (அலுமினியத்தால் அமைக்கப்பட்டது) அறிவிக்கப்படலாம். டெல்லி மற்றும் வாரணாசி இடையே புல்லட் ரயில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?
கோவிட் காலத்தில், ரயில்வேக்கு சரக்கு ரயில்கள் மூலமாக பெரும்பாலான வருவாய் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பயணிகள் ரயில்களின் கட்டணைத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, பல்வேறு சரக்கு வழித்தடங்களைத் ஏற்படுத்த ரயில்வே மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களின் ரயில் இணைப்பை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக, சில தனியார் நிறுவனங்களை அரசு ஈடுபடுத்தக் கூடும். மின்சாரம் மற்றும் டீசலை சார்ந்திருப்பதை குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் இந்திய ரயில்வேயில் சூரிய சக்தி திறன் மேம்படுத்தப்படும்.
இதனுடன், தேசிய ரயில் திட்டத்தில் 2030க்குள் 100 சதவீத மின்மயமாக்கல் இலக்கு அறிவிக்கப்படும். PPP மாதிரியின் மூலம், அதாவது அரசு தனியார் கூட்டாளித்துவத்தின் மூலம், ரயில் நிலையங்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும். இதற்காக 12 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டியுளாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு, கட்டணம் தொடர்பான விஷயங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்க, ரயில் மேம்பாட்டு ஆணையத்தை ஏற்படுத்துவது குறித்தும் அரசு அறிவிக்கலாம். நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் தேஜாஸ் போன்ற பல திட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன?
கடந்த ரயில்வே பட்ஜெட்டை அறிவிக்கும் போது, ரயில்வே மேம்பாட்டிற்கான தேசிய ரயில் திட்டம் 2030 என்ற திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்திருந்தார். ரயில்வே வசதிகளுக்கு புதிய தோற்றம் தரும் திட்ட்டத்தில், 1 லட்சம் கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 2023க்குள், முக்கிய ரயில் பாதைகளில் 100 சதவீதம் மின்மயமாக்கல் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுக்கு-2 வகை நகரங்கள் மற்றும் அடுக்கு-1 வகை நகரங்களின் வெளிப்புற பகுதிகளில் மெட்ரோ ரயில் அமைப்பு தயாராகி வருகிறது. இந்த திட்டம் இந்திய ரயில்வே 2030ஆம் ஆண்டுக்குள் "உலகின் முதல் 100 சதவீத பசுமை ரயில் சேவையாக" மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முறை ரயில்வே பட்ஜெட்டில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவிக்கலாம். இதில், பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய ரயில்கள், குழாய்கள் அல்லது சுரங்கங்கள் வழியாக பயணிக்கும். இந்த போக்குவரத்து முறை புல்லட் ரயில்களை விட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் அரசாங்கம் வெளியிடலாம். இந்த பட்ஜெட்டில் 500 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டமும் அறிவிக்கப்படலாம்.
ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR