கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

கொச்சியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சர்ச் தலைவர்கள்  கிறிஸ்துவ சமூகம் தொடர்பான தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டதுடன், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிரதமரிடம் விவாதித்தனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2023, 10:32 PM IST
  • பிரதமர் மோடியின் கேரளா பயணத்தின் போது, இந்தியாவின் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்களுடன் சந்திப்பு.
  • இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி.
  • சர்ச் தலைவர்கள் கிறிஸ்துவ சமூகம் தொடர்பான தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி! title=

இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு தேவாலயங்கள் மற்றும் 8 கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, செல்வாக்கு மிக்க சிறுபான்மை சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுக்கும் பாஜகவின் முயற்சியாக, பிரதமர் மோடியின் கேரளா பயணத்தின் போது, இந்தியாவின் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளதாக  கருதப்படுகிறது.

கொச்சியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சர்ச் தலைவர்கள்  கிறிஸ்துவ சமூகம் தொடர்பான தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டதுடன், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது கேரள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே சுரேந்திரனும் உடனிருந்தார்.

கூட்டத்திற்குப் பிறகு, சுரேந்திரன், கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக நடைபெற்றதாகவும், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆயர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் கூறினார். சர்ச் பிரதிநிதிகள் கிறிஸ்துவ சமூகம் தொடர்பான தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். நாட்டின் வட மாநிலங்களில் கிறிஸ்தவ நிறுவனங்கள் மற்றும் மிஷனரிகள் மீதான தாக்குதல்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை தேவாலய பிரதிநிதிகள் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

சிரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சீரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் கர்தினால் பாசெலியோஸ் கிளீமிஸ், சீரோ ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவர் பசேலியோஸ் மார்த்தோமா மேத்யூஸ் III, ஜாகோபைட் சர்ச் ஜோசப் மோர் கிரிகோரியோஸ் மற்றும் பெருநகர அறங்காவலர் உட்பட எட்டு முக்கிய தேவாலய பாதிரியார்களை பிரதமர் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பிடத்தக்க வகையில், கேரள மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 18 சதவிகிதம் கிறிஸ்தவ சமூகம். முக்கியமாக, மாநிலத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் 25 முதல் 30 சதவிகிதம் கிறிஸ்தவ மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த புதிய நடவடிக்கையின் மூலம், சிறுபான்மை சமூகத்தை பெரிய அளவில் சென்றடைய பாஜக சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.

மேலும் படிக்க | Kochi Water Metro: பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ள தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ...!

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News