Tractor Rally வன்முறையில் நீதித்துறை விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் PIL

Tractor Rally வன்முறையில் நீதித்துறை விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் கிட்டத்தட்ட 300 போலீசார் காயமடைந்துள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2021, 05:28 PM IST
  • காவல்துறையினரை தாக்கும் போராட்டக்காரர்கள்
  • டிராக்டர் பேரணியில் நடந்த அசம்பாவிதம்
  • விவசாயப் பேரணியில் போலீசார் மீது வன்முறை தாக்குதல் வீடியோ வைரல்
Tractor Rally வன்முறையில் நீதித்துறை விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் PIL  title=

புதுடெல்லி: தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தலைநகரில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் (Tractor Rally) போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவும், அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் டெல்லி காவல்துறைக்கு என்று இந்த பொதுநலன் மனு கோரிக்கை வைக்கிறது. 

விவசாயிகளை எதிர்த்து டெல்லியில் வெடித்த வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீசாருடன் மோதல் மற்றும் செங்கோட்டையின் (Red Fort) கொத்தளத்தில் தங்கள் கொடிகளை ஏற்றினார்.

Also Read | Tractor பேரணியில் கலந்துக் கொண்ட விவசாயி கொலை, போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமா?

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவின் அரசியலமைப்பு அமர்வைக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஒருவர் இந்த பொதுநலன் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் இதுவரை மொத்தம் 22 எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளனர். ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள  சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகளை ஆராய்ந்து போராட்டக்காரர்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.

மத்திய டெல்லி, செங்கோட்டை, நாங்லோய், Mukarba Chowk ஆகிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களிலிருந்து காட்சிகளைப் பிரித்தெடுக்க சிறப்பு செல் மற்றும் கிரைம் பிராஞ்ச்சினரின் உதவியையும் காவல்துறையினர் நாடியுள்ளனர்.  குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியினரின் வன்முறையில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Also Read | Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News