நாக்பூர்: கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் மே 19 ஆம் தேதியுடன் முடிந்தது. மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. நாடு ழுமுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருப்பதையே பெரும்பாலும் ஊடங்களின் கருத்து கணிப்பு ஆகா இருந்தது.
கருத்துக்கணிப்புகளில் முடிவுகளை அடுத்து பாஜக-வின் முக்கிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளராக பையாஜி ஜோஷியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் பா.ஜ.க முக்கிய தலைவர் கைலாஷ் விஜயவர்த்தியாவும் கூட இருந்தார்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரபப்பு மற்றும் விவாதத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நிதீன் காட்காரி, பிரதமர் வேட்பாளர் மற்றும் கட்சியை குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். அது பாஜக-வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் நிதின் கட்கரி ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்.
கடந்த வருடம் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியாதல், பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் என பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இது பாஜக மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
நாளை மறுநாள் தேர்தல் முடிவு வர உள்ள நிலையில், நிதின் கட்கரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருவதால், பிரதமர் பதவிக்கு நிதின் கட்காரியை ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்துகிறதா? ஒருவேளை மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க சூழல் உருவானால், மோடிக்கு பதிலாக நிதின் கட்காரி பிரதமராக பதவி ஏற்ப்பாரா? போன்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.