யாஸ் புயலின் தாக்கம் குறித்து மறுஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க பயணம் மேற்கொண்டார். ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்ள இருந்த மறுஆய்வுக் கூட்டத்திற்கு முதலவர் மம்தா பானர்ஜி அரை மணிநேரம் தாமதமாக வந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து நடத்தப்பட்ட மறுஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்ததற்காக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மாநில நலன் சார்ந்த விஷயங்கள் மற்றும் மக்கள் நலனை விட தனது ஆணவமே மேலானது என மம்தா கருதுவதாக அமித்ஷா ட்வீட் செய்துள்ளார் கூறினார்.
“மம்தா நடந்து கொண்ட விதம் துரதிர்ஷ்டவசமானது. யாஸ் சூறாவளி மக்களை பெரிதும் பாதித்துள்ளது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே இப்போதைய தேவை. துரதிர்ஷ்டவசமாக, மம்தா பானர்ஜிக்கு பொது நலனை விட ஆணவம் தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார். இன்றைய கீழ்தரமான நடத்தை அதை பிரதிபலிக்கிறது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Mamata Didi’s conduct today is an unfortunate low. Cyclone Yaas has affected several common citizens and the need of the hour is to assist those affected. Sadly, Didi has put arrogance above public welfare and today’s petty behaviour reflects that.
— Amit Shah (@AmitShah) May 28, 2021
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும், பிரதமர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அரசியலமைப்பு நெறிமுறைகளை படுகொலை செய்வதாகும் என்றும் கூட்டாட்சி கலாச்சாரத்தை மீறிய செயல் எனவும் கூறினார்.
"பிரதமர் நரேந்திர மோடி கூட்டாட்சி கொள்கையை கடைபிடிப்பவர். எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்க கட்சி வேறுபாடு காட்டாமல் அனைத்து முதல்வர்களுடனும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மம்தா பானர்ஜியின் கீழ்தரமான அரசியலால், மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது, ”என்று நட்டா ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ | ஜூன் முதல் உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்வு: விமான போக்குவரத்து அமைச்சகம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR