Dhirendra Shastri: சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாகேஷ்வர் தாமின் திரேந்திர சாஸ்திரி யார்?

Bageshwar Dham Controversy: பாகேஷ்வர் தாம் பகுதியைச் சேர்ந்த திரேந்திர சாஸ்திரி சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறி வருகிறனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 22, 2023, 11:37 AM IST
  • பாகேஷ்வர் தாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சிறிய கோவிலாக இருந்தது.
  • பாகேஷ்வர் தாமின் திரேந்திர சாஸ்திரி யார்.
Dhirendra Shastri: சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாகேஷ்வர் தாமின் திரேந்திர சாஸ்திரி யார்? title=

சமீபத்தில், ஹிந்து மதக் கதைகளின் வசனகர்த்தாவான ஆச்சார்யா திரேந்திர சாஸ்திரி வைரலாகி வருகிறார். இந்த நேரத்தில் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக சமூக ஊடகங்கத்தில் நாக்பூரில் சாஸ்திரி சம்பந்தப்பட்ட செய்திகள் பரபரப்பாக பகரப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றன. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் உள்ள பாகேஷ்வர் தாமின் தலைமைப் பூசாரி சாஸ்திரி, ஜனவரி 5 முதல் ஜனவரி 13 வரை பகவத் கதை கூற நாக்பூரில் இருந்து வந்தார், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ராய்ப்பூருக்கு அந்த இடத்தை விட்டுச் சென்றபோது இது தொடர்பான சர்ச்சை வெடிக்கத் தொடங்கியது. ஏனெனில் நாக்பூரில் அவர் ஒரு பொது மன்றத்தில் அதிசயம் ஒன்றை செய்ய பகுத்தறிவாளர்களால் சவால் விடப்பட்ட போது தான் அவர் நாக்பூரை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தனது நிகழ்ச்சிகளை இரண்டு நாட்கள் குறைத்துவிட்டதாக தெரிவித்தார்.

யார் இந்த திரேந்திர சாஸ்திரி, இவர் எப்படி பிரபலமடைந்தார்?
கடந்த சில ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் தந்திரிகள் மற்றும் கதை சொல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது, அவர்களில் 25 வயதான சாஸ்திரியும் ஒருவர் ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ டிரைவராக இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறனர். மேலும் பாகேஷ்வர் தாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சிறிய கோவிலாக இருந்தது மற்றும் முக்கியமாக சாஸ்திரி செய்த அற்புதங்களால் தான் பிரபலமடைந்தது என்றும் கூறப்பட்டு வருகின்றது. அத்துடன் இந்தவின் தயவால் சமீபகாலமாக இந்த கிராமத்தில் சாலைகள், உணவகங்கள், ஓட்டல்கள் என பல அடிப்படை வசதிகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 2 மனைவிகளுடன் வாரத்தில் 3 நாட்கள்! 7வது நாளில் யாருடன்? - புது ஒப்பந்தம்

பெரும்பாலும் பிரச்சனையில் இருக்கும் மக்களை தனது இல்லத்திற்கு அழைப்பதற்காக சாஸ்திரி அறியப்படுகிறார், அங்கு அவர் அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து, அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி அவர்களிடம் கூறுவாராம்.

இதற்கிடையில் இவர் தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார், அதன்படி பாகேஷ்வர் தாமின் மஹந்த் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, மதமாற்றம் குறித்து வெளிப்படையாகப் பேசிய முதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தீரேந்திர சாஸ்திரி மீது மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கையை பரப்பியதாக குற்றம் சாட்டப்படுகிறது. மற்றொரு பக்கம் பாபாவுக்கு ஆதரவாக மக்கள் கைகொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாபா மீதான குற்றச்சாட்டுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. மேலும் பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா, கபில் மிஸ்ரா உள்ளிட்ட பல பாஜக தலைவர்களும் பாபா பாகேஷ்வருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | Budget 2023: பல்வேறு துறைகளுக்கு அரசிடம் உள்ள டாப் 5 எதிர்பார்ப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News