கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் COVID-19 தொற்றின் தடுப்பு மருந்தான Sputnik-V- குறித்து பெரிய அளவு ஆய்வுகளை நடத்த மருந்து நிறுவனமான Dr. Reddy’s Laboratories முன்மொழிந்திருந்தது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) வியாழக்கிழமை, இந்த கோரிக்கையை மறுத்து விட்டது. முதலில் சிறிய தொகுதிகளில் மருத்துவ பரிசோதனைகளை நடத்தும்படி DCGI, Dr Reddy’s நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆரம்ப கட்ட ஆய்வுகளின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தரவு சிறிய தொகுதிகளில் வெளிநாடுகளில் நடத்தப்படுவதாகவும், இந்திய பங்கேற்பாளர்கள் குறித்த எந்த உள்ளீடுகளும் அதில் கிடைக்கவில்லை என்றும் மருந்து கட்டுப்பாட்டாளரான DCGI குறிப்பிட்டது.
ஸ்பூட்னிக் V இன் சோதனைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. ரஷ்ய அரசாங்கம் முழு மருத்துவ பரிசோதனைகளையும் செய்யாமலேயே Sputnik-V-ஐ COVID-19-க்கான தடுப்பு மருந்தாக (Vaccine) பதிவு செய்துள்ளது. மேலும், இந்த தடுப்பு மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் 76 பேர் மட்டுமே சோதிக்கப்பட்டார்கள்.
ALSO READ: COVID Alert: காற்றிலும் கலந்துள்ளது கொரோனா, Mask முக்கியம், இடைவெளி மிக அவசியம்!!
சில நாடுகள் Sputnik-V மருத்துவ பரிசோதனைகளின் போது முரண்பாடுகளை எதிர்கொள்கின்றன. தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபிக்க இந்திய அரசு இரண்டாம் கட்ட சோதனைகளை நடத்த வேண்டும் என்று இந்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரஷ்ய தடுப்பு மருந்து குறித்து மிகுந்த ஆரவாரத்திற்குப் பிறகு, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த மாதம், Sputnik-V-யின் மூன்றாம் கட்ட சோதனைகள் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
கடந்த மாதம், Sputnik-V-ன் இறுதி கட்ட மருத்துவ பரிசோதனைகள் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் தொடங்கப்படலாம் என்று டாக்டர் ரெட்டிஸ் அறிவித்தது.
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியதாக ரஷ்யா ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு இந்த தடுப்பு மருந்து, “பாதுகாப்பானது, நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது, ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்கு கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது" என்று அறிவித்தது.
Sputnik-V, அடினோவைரஸ் திசையன் சார்ந்த தடுப்பூசியாகும். இது, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கமலேயா அறிவியல் ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 11 அன்று இது பதிவு செய்யப்பட்டது.
ALSO READ: July 2021-க்குள் 25 கோடி இந்தியர்கள் COVID Vaccine-ஐ பெறுவார்கள்: இந்திய அரசு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR