ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Hijab Issue: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2022, 12:39 PM IST
  • இஸ்லாம் மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவது சரியா, தவறா?
  • இது தொடர்பான சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது.
  • இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் title=

இஸ்லாம் மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவது சரியா, தவறா? இது தொடர்பான சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. கர்நாடகாவின் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள கல்வி நிலையத்தில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வர வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியது. அங்கு பயின்று வந்த முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து வந்ததற்கு நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் விசாரித்தார். அப்போது, ஹிஜாப் விவகாரத்தை, 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க அவர் பரிந்துரை செய்தார். இதன்படி தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித்அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. 

நாடு முழுவதும் கவனம் ஈர்த்த இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி அமர்வு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும், எனவே கல்வி நிலையங்களில்  ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றும் சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது. 

மேலும் படிக்க | தேர்வு எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடை..! 

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

இவ்வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக பதிலளிக்க கர்நாடாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

hijab issue

மேலும் படிக்க | ஹிஜாபை தொடர்ந்து பைபிள் - தொடர்ந்து சர்ச்சையில் கர்நாடகம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News