கடந்தாண்டு டிசம்பர் மாதம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தின் நீதிமன்ற வளாகத்தின் பயங்கர வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயமடைந்தனர். லூதியானா காவல் ஆணையகரத்தில் முதலில் இந்த குண்டுவெடிப்பு வழக்கு பதிவான நிலையில், கடந்த ஜனவரி மாதம் என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையை தீவிரமாக மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், லூதியானா குண்டுவெடிப்பு மட்டுமின்றி, வெடிகுண்டு, ஆயுதங்கள் போதை பொருள்களை கடத்தும் பல்வேறு குற்றவாளிகளை அடுத்ததடுத்து கைதுசெய்தனர்.
தொடர்ந்து, ஹர்பிரீத் சிங்கை பிடிக்க உதவினால், ரூ. 10 லட்சம் கொடுக்கப்படும் என என்ஐஏ அறிவித்தது. அதுமட்டுமின்றி, சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் ஹர்பிரீத் சிங் மீது பிணையில் வெளிவர இயலாத பிடிவாரண்டையும், லுக் அவுட் நோட்டீஸையும் பிறப்பித்திருந்தது.
மேலும் படிக்க | ஒருத்தனுக்கு ஒருத்தி மட்டுமே! பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேசம் முடிவு
இந்நிலையில், நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த பயங்கரவாதியும், லூதியானா குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியுமான ஹேப்பி மலேசியா என்ற ஹர்பிரீத் சங்கை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், ஹர்பிரீத் வருவதாக என்ஐஏவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர் கைதானார். https://zeenews.india.com/tamil/topics/Delhi
மேலும், ஹர்பிரீத் சிங் பாகிஸ்தானை தலைமையிடமாக வைத்து இயங்கும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் லக்பீர் சிங் ரோட் என்பவரின் கூட்டளி என தெரியவந்துள்ளது. லூதியானா நீதிமன்ற வெடிகுண்டு சம்பவத்தில் லக்பீர் சிங்கிற்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, என்ஐஏ செய்தித்தொடர்பாளர் கூறும்போது,'பாகிஸ்தானில் இருந்து லக்பீர் மூலம் அனுப்பப்பட்ட வெடிகுண்டு சாதனத்தை இந்தியாவில் உள்ள அவரது கூட்டாளிகளுக்கு கொண்டுசேர்ததில் ஹர்பிரீத்தின் பங்கு அதிகம்' என்றார்.
மேலும் படிக்க | Gujarat Polls : பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பேரணி... 50 கி.மீ., 16 தொகுதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ