விவசாயிகளின் போராட்டத்தால் மக்களுக்கு சிரமம்; Haryana-Punjab உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கில் முதலில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் விவசாயிகளை இணைத்தே பிறகே வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2020, 06:59 PM IST
  • அரியானா மற்றும் டெல்லி எல்லைக்கு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உச்ச நீதிமன்ற (High Court) உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை.
  • பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் போராட்டக்காரர்களிடம் இருந்து இழப்பீடு கோர வேண்டும்.
  • இந்த வழக்கில் விவசாயிகளை இணைத்தே பிறகே வழக்கு விசாரணைக்கு வரும்: உயர் நீதிமன்றம் உறுதி.
விவசாயிகளின் போராட்டத்தால் மக்களுக்கு சிரமம்; Haryana-Punjab உயர் நீதிமன்றத்தில் வழக்கு title=

பஞ்சாப்: அரியானா-டெல்லி எல்லையை நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்தை அடைந்தது. வழக்கறிஞர் அரவிந்த் சிங் (Advocate Arvind Singh) தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அரியானா மற்றும் டெல்லி எல்லைக்கு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் (Farmers Protest) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

போராட்டக்காரர்களால் அரியானா-டெல்லி எல்லை (Haryana-Delhi Border) மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் சிரமத்தை எதிர் கொள்கின்றனர் என்று மனுதாரர்  கூறினார். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உச்ச நீதிமன்ற (High Court) உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மற்றும் பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் போராட்டக்காரர்களிடம் இருந்து இழப்பீடு கோர வேண்டும் என மனுவில் கூறப்பட்டு உள்ளது. 

Image

ALSO READ |  விவசாயிகளின் போராட்டத்தால் Air India விமானத்தை தவறவிட்டவர்களுக்கு ஆறுதல்

மேலும் நிலைமை மோசமடைந்துவிட்டால், நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலங்களின் காவல்துறையுடன் பாரா இராணுவப் படைகளை நிறுத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. போராட்டம் காரணமாக ரயில் பாதைகள் தடைபடுவதால் ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பை எதிர்ப்பாளர்களிடம் (Farmers Protest) வசூலிக்க வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் பஞ்சாப் மற்றும் அரியானா அரசு (Punjab and Haryana Government) மற்றும் அம்மாநில டிஜிபி ஆகியோர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆனால் விவசாயிகள் தரப்பில் இருந்து யாரும் சேர்க்கப்படவில்லை.

Image

இன்று நடந்த விசாரணையின் போது, ​​நீதிமன்றம் மனுதாரரிடம், இந்த வழக்கில் முதலில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் விவசாயிகளை இணைத்தே பிறகே வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ALSO READ |  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டம் குப்பை தொட்டியில் வீசப்படும்: ராகுல் காந்தி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News