ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஷோபியனின் கெல்லர் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் கெல்லர் பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர்.
Shopian: 3 terrorists killed in an encounter between terrorists & security forces in Keller area. Weapons also recovered. Operation in progress. CRPF, Army & J&K police had launched a joint operation in the early hours today.#JammuAndKashmir (visuals deferred by unspecified time) pic.twitter.com/dZpwwhxzBh
— ANI (@ANI) March 28, 2019
இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். நேற்று இரவு பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கின்றார்களா என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். மேலும், அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.