புதுடெல்லி: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு என்ன என்று முழுமையாக தெரியவில்லை. ஆனால், நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுப் பகுதி என்பதால், பொதுவாக அங்கு ஏற்படும் பெரும்பாலான நிலநடுக்கங்கள் வலுவானதாக இருப்பதில்லை. இன்று, அந்தமான் நிகோபார் தீவுகளில், கேம்ப்பெல் விரிகுடாவில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
An earthquake of Magnitude 5.3 hits Campbell Bay, Andaman and Nicobar Island: National Center for Seismology pic.twitter.com/Abq8I4E7mX
— ANI (@ANI) July 9, 2023
கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், பல கட்டடங்கள் அதிர்ந்து குலுங்கின. கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதுமே, பொதுமக்கள் பதறியடித்துக் கொண்டு உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம்... விதி என்ன சொல்கிறது..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ