புதுடெல்லி: தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளியை ஒட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வில் மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு '' தீபாவளி வாழ்த்துக்கள் '' (Diwali Wishes) என்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள், அனைவரின் செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
ட்விட்டரில் மக்களுக்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் “அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த திருவிழா மேலும் பிரகாசத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும். எல்லோரும் செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
பிரதமர் மோடி (PM Modi) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' நிகழ்ச்சியிலும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். பிரதமர் தனது உரையில், நம் தேசத்தை அச்சமின்றி பாதுகாக்கும் படையினருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் வகையில் தீபாவளியன்று ஒரு விளக்கை ஏற்றி வைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
ALSO READ: தீபங்களின் திருநாள் தீபாவளி: மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!!
இன்று நமது நாட்டின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள். மோடி, பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அவர், "நாட்டின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் (Jawaharlal Nehru) பிறந்த நாளில் அவருக்கு என் தாழ்மையான அஞ்சலி" என்று எழுதினார்.
பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை எல்லைப் பகுதிகளில் இராணுவ வீரர்களுடன் (Indian Army) கொண்டாட வாய்ப்புள்ளது. அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்ற காலத்திலிருந்தே, தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: இந்த தீபாவளியையும் பிரதமர் மோடி எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடக்கூடும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR