Election Results Latest Updates: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ஆரம்பத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இடையே கடுமையான போட்டி இருந்தது. கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக 43 இடங்களில் முன்கூட்டியே முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 1998 முதல் 2013 வரை டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, கணிப்புகளின்படி முழுமையான தோல்வியை எதிர்கொள்கிறது. காங்கிரஸ் கட்சி ஒருசில இடங்களையும் வெல்லத் தவறிவிட்டது. மேலும் அனைத்து தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளது.
காங்கிரஸ் ஆரம்பத்தில் பத்லி சட்டமன்ற தொகுதியில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட தேவேந்தர் யாதவ் முன்பு 2008 மற்றும் 2013 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார். ஆரம்பத்தில் முன்னிலை வகித்தாலும், தற்போது பின்தங்கியுள்ளார். ஆம் ஆத்மியின் வேட்பாளர் அஜேஷ் யாதவ் மற்றும் பாஜகவின் வேட்பால்ர் தீபக் சவுத்ரி ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
இந்தத் தேர்தலிலும் காங்கிரஸின் வெற்றி எனப்து முந்தைய எக்ஸிட் போல் வெளியிட்ட கருத்துக்கணிப்பை போலவே உள்ளது. அதாவது 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு இடத்தைக் கூட வெல்லாது எனக் கூறியிருந்தன. இந்த தேர்தலிலும் மோசமான கட்சிக்கு மோசமான நிலையே ஏற்பட்டுள்ளது.
தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, "தனது கட்சி நிச்சயமாக நல்ல செயலை தரும். தேர்தல் முடிவுகளை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறு வருகிறது என்று குறிப்பிட்டார்.
மறுபுறம் டெல்லி காங்கிரஸ் தலைவர் விஷேஷ் டோகாஸ், "டெல்லியில் அரசாங்கத்தை அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கை வகிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார், காங்கிரஸ் தேர்தலில் "கிங்-மேக்கர்" ஆக இருக்கும் என்றும், அதன் ஆதரவு இல்லாமல் எந்த அரசாங்கத்தையும் அமைக்க முடியாது என்றும் கூறினார்.
டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய புது டெல்லி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித், "இந்த கட்டத்தில், பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்று தெரிகிறது. நாங்கள் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினோம். ஆனால் நாங்கள் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று மக்கள் நினைத்ததாகத் தெரிகிறது. மக்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பாஜக 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் அரசாங்கத்தை அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையான 36 இடங்களில் ஐந்து இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில், 28 இடங்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் போட்டியில் உள்ளது.
மேலும் படிக்க - Delhi Election 2025: இதுவரை டெல்லியில் ஆதிக்கம் செலுத்தியது யார்? இந்த தேர்தலில் வெற்றி பெற போவது எந்த கட்சி? ஓர் பார்வை!
மேலும் படிக்க - டெல்லி தேர்தல் முடிவுகள் 2025: டெல்லியில் பாஜக வெற்றி பெற்றால் முதல்வர் பதவி யாருக்கு?
Election Results Latest Updates: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ஆரம்பத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இடையே கடுமையான போட்டி இருந்தது. கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக 43 இடங்களில் முன்கூட்டியே முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 1998 முதல் 2013 வரை டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, கணிப்புகளின்படி முழுமையான தோல்வியை எதிர்கொள்கிறது. காங்கிரஸ் கட்சி ஒருசில இடங்களையும் வெல்லத் தவறிவிட்டது. மேலும் அனைத்து தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளது.
காங்கிரஸ் ஆரம்பத்தில் பத்லி சட்டமன்ற தொகுதியில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட தேவேந்தர் யாதவ் முன்பு 2008 மற்றும் 2013 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார். ஆரம்பத்தில் முன்னிலை வகித்தாலும், தற்போது பின்தங்கியுள்ளார். ஆம் ஆத்மியின் வேட்பாளர் அஜேஷ் யாதவ் மற்றும் பாஜகவின் வேட்பால்ர் தீபக் சவுத்ரி ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
இந்தத் தேர்தலிலும் காங்கிரஸின் வெற்றி எனப்து முந்தைய எக்ஸிட் போல் வெளியிட்ட கருத்துக்கணிப்பை போலவே உள்ளது. அதாவது 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு இடத்தைக் கூட வெல்லாது எனக் கூறியிருந்தன. இந்த தேர்தலிலும் மோசமான கட்சிக்கு மோசமான நிலையே ஏற்பட்டுள்ளது.
தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, "தனது கட்சி நிச்சயமாக நல்ல செயலை தரும். தேர்தல் முடிவுகளை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறு வருகிறது என்று குறிப்பிட்டார்.
மறுபுறம் டெல்லி காங்கிரஸ் தலைவர் விஷேஷ் டோகாஸ், "டெல்லியில் அரசாங்கத்தை அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கை வகிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார், காங்கிரஸ் தேர்தலில் "கிங்-மேக்கர்" ஆக இருக்கும் என்றும், அதன் ஆதரவு இல்லாமல் எந்த அரசாங்கத்தையும் அமைக்க முடியாது என்றும் கூறினார்.
டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய புது டெல்லி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித், "இந்த கட்டத்தில், பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்று தெரிகிறது. நாங்கள் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினோம். ஆனால் நாங்கள் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று மக்கள் நினைத்ததாகத் தெரிகிறது. மக்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பாஜக 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் அரசாங்கத்தை அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையான 36 இடங்களில் ஐந்து இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில், 28 இடங்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் போட்டியில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ