சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-U 2.0)". இது வீடற்றவர்களுக்கு சொந்த வீடுகட்ட நிதி உதவியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 1 கோடி நகர்ப்புற ஏழைகள், நடுத்தர குடும்பங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதி உதவியை விரிவுபடுத்துகிறது, இது ஏழை குடும்பங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க உதவுகிறது. கடந்த ஆகஸ்ட் 9, 2024 அன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் படிக்க | திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? வெளியான தகவல்
எவ்வளவு மானியம் கிடைக்கும்?
சொந்த வீடு கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கடனை பெறும் தனிநபர்களுக்கு, இந்தத் திட்டம் வீட்டுக் கடன் தொகையில் 4 சதவீதம் வரை மானியத்தை வழங்குகிறது. இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0ன் கீழ் கட்டப்படும் 1 லட்சம் புதிய வீடுகளுக்கு, செப்டம்பர் 1 முதல் ஐந்தாண்டு காலப்பகுதியில் கட்டப்படும் ஒவ்வொரு புதிய வீடுகளுக்கும் ரூ.2.50 லட்சம் மானியமாக ஒதுக்கப்படும். இதற்காக நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அனைத்து குடிமக்களுக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் முதன்மை நோக்கமாகும்.
கடன் பெற தகுதி என்ன?
இருப்பினும், விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். நகர்ப்புற வீடுகள் மட்டுமின்றி, பிரதமரின் இலவச வீட்டு வசதித் திட்டம் கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கும் நிதியுதவி அளிக்கிறது. இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், SC/ST பிரிவினர், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் என அனைவருக்கும் அவர்களின் சொந்த வீடு கட்டும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மானியம் பெற வருமான அளவுகோள்கள் உள்ளன. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள் (EWS) ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்டவர்களின் (LIG) ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். மேலும் நடுத்தர வருமானக் குழுக்கள் (MIG) ஆண்டு வருமானம் ரூ.9 லட்சம் வரை இருக்க வேண்டும். இதனை பூர்த்தி செய்பவர்கள் இந்தத் இடத்தின் கீழ் மானியம் பெறலாம். கடந்த 20 ஆண்டுகளில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசாங்க வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பலன் பெற்றவர்கள் இந்த திட்டத்தில் எந்தவித பலன்களையும் பெற முடியாது.
மேலும் படிக்க | Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ