உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2022: ஆண்டுதோறும் மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது. இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஹைப்பர் டென்ஷன் என்பது உயர் இரத்த அழுத்தம். உலகெங்கிலும் இருதய நோய்களுக்கான மிக முக்கிய மற்றும் பொதுவான காரணங்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். உலகளவில், ஒரு பில்லியனுக்கும் அதிகமானோருக்கு தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
1. ஒப்பீட்டளவில் மோசமான சுகாதாரம்
2. தனிப்பட்ட சுகாதார விழிப்புணர்வு
3. தவறான புரிதல்கள்
4. குறைவான வாழ்க்கைத் தரம்
மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன
மருத்துவ உதவி மற்றும் மருந்துகளைத் தவிர, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தவிர்க்க உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பின்பற்றக்கூடிய சில முக்கிய நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தனக்கென்று ஒரு வழக்கத்தை கடைபிடித்தல்
தன்க்கு ஏற்ற வகையிலான வழக்கத்தை கடைபிடிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தில் அதிசயங்களைச் செய்கிறது. உடலைப் பொறுத்த வரையில் ஒழுக்கம் என்பது சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் வழிகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கத்தை கடைபிடிப்பது அத்தனை எளிதானது அல்ல என்றாலும், இதன் மன அழுத்தம் மற்றும் பதட்டம் பெரிய அளவில் குறையும் என்பது உண்மை.
ஆரோக்கியமான உணவு
நல்ல இதய ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து கட்டாயமாகும். உங்கள் உணவில் பிரெசஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், உலர் பழங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவை இருக்கட்டும். ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்ப்பது மன அழுத்தத்தையும் தடுக்க உதவும்.
போதுமான நீர் சத்து
மனித உடல் உயிர் வாழ்வதற்கு நீர் மிக முக்கியமானது. இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், போதுமான நீர் உட்கொள்ளவது கட்டாயமாகும். இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் தேவை. நீரிழப்பு மோசமாகி உடல் அசௌகரியமாகவோ அல்லது வலியாகவோ கூட மாறலாம்.
மன அழுத்தம்
எந்த விதமான அழுத்தமும் கூடாது என்பது அல்ல. ஆனால், அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம் உங்கள் உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் பயிற்சி
தினசரி உடல் பயிற்சியில் ஈடுபடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உடற்பயிற்சிகள் போன்ற உடல் செயல்பாடுகள் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR