புத்தாண்டு ராசிபலன்: 2025 -இல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. சனியும், குருவும் சேர்ந்து அருள்வார்கள்

Most Lucky Zodiac Signs of New Year 2025: 2025 புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. வேத ஜோதிடத்தின் படி, மிக முக்கியமான நவகிரகங்களான சனியும், குருவும் அடுத்த ஆண்டு அதாவது 2025 இல் தங்கள் ராசிகளை மாற்றுவார்கள்.

Sani Peyarchi Palangal: 2025 -இல் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் மனித வாழ்க்கையில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் பொதுவாக 13 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கும் ஒரு முறை ராசி மாற்றம் கொள்கிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து வெளியேறி குருவின் ராசியான மீன ராசியில் நுழைகிறார். மே 14 ஆம் தேதி குரு மிதுன ராசிக்குள் நுழைகிறார். வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சிகள் அதிக நன்மை பயக்கும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /10

அனைத்து கிரகங்கள்லும் சனி பகவானும் குரு பகவானும் மிக முக்கியமான கிரகங்களாக பார்க்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில் இவை இரண்டும் தங்கள் ராசிகளை மாற்றும். சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் முகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக கருதப்படுகின்றன.  

2 /10

 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் நடக்கும். பல வித வெற்றிகளை காண்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /10

மேஷம்: மேஷ ராசியினருக்கு குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி புத்தாண்டில் நல்ல பலன்களைத் தரும். குரு பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும், புதிய வேலை தேடினாலும் விரும்பிய வேலை கிடைக்கும். நல்ல சம்பளமும் கிடைக்கும், திடீரென்று செல்வம் பெருகும். 

4 /10

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டின் தொடக்கம் ஆக்கப்பூர்வமாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புத்தாண்டு உங்களுக்கு பல விதமான மகிழ்ச்சியான நிகழ்வுகளை தரவுள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  

5 /10

சிம்மம்: மீனத்தில் சனி பெயர்ச்சியும் மிதுனத்தில் குரு பெயர்ச்சியும் சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். 2025 சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் பொருளாதார நிலை வலுப்பெறும். அதிக லாபம் ஈட்டும் வர்த்தகர்கள் தங்கள் தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்தலாம். புதிய தொழில் தொடங்கலாம்

6 /10

துலாம்: சனி பகவானும் குரு பகவானும் 2025 ஆம அண்டில் துலாம் ராசிக்கு அருள்புரிவார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிப்பதில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும், அவற்றை கடவுள் அருளுடன் விரைவாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் கூடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

7 /10

விருச்சிகம்: குரு மற்றும் சனி பெயர்ச்சியின் பலன்கள் விருச்சிக ராசியினருக்கு சாதகமாக இருக்கும். விருச்சிக ராசியினருக்கு செய்யும் வேலையில் வெற்றியும், நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையுடன் நீங்கள் எந்த வேலையையும் செய்து அதில் வெற்றியைப் பெறலாம், சொத்து சம்பந்தமாக விஷயத்தில் லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

8 /10

மகரம்: சனி பெயர்ச்சி மகர ராசியினருக்கு ஏழரை சனியிலிருந்து நிவாரணம் அளிக்கும். குரு பெயர்சிச்யின் தாக்கத்தால், மகர ராசிக்காரர்களுக்கு பல வித நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகள் மற்றும் கவலைகளும் நீங்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் புதிய உயரங்களை அடையப் போகிறீர்கள்.

9 /10

மீனம்: சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் 2025 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களுக்கு பல பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டில், மீன ராசிக்காரர்களின் நிதி நிலைமை உச்ச நிலையில் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சனி மற்றும் குருவின் அனுக்கிரகத்தால் வேலையில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.