இன்றைய காலகட்டத்தில் பல கடுமையான நோய்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. அதிக கொலஸ்ட்ரால் நோயும் இவற்றில் அடங்கும். முன்பெல்லாம் முதியவர்களைத் தாக்கும் இந்நோய் தற்போது இளம் வயதினரையும் தாக்குகிறது. நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. முதலில் நல்ல கொழுப்பு (HDL) மற்றும் இரண்டாவது கெட்ட கொழுப்பு (LDL). உடலின் செயல்பாட்டிற்கு நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். அதே சமயம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது அது நரம்புகளில் படிந்து ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது.
கொழுப்பு உடலில் படிவதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கலாம். இருப்பினும், ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் அதிக கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம். இது தவிர, சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடனும் இதைக் குறைக்கலாம். நரம்புகளில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி? பயனுள்ள வீட்டு வைத்தியம் ஒன்றை தெரிந்து கொள்வோம்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வீட்டு வைத்தியம்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு பயன்படுத்தலாம். இந்த இரண்டு மசாலாக்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் உள்ளன.
குர்குமின்
மஞ்சளில் குர்குமின் என்ற தனிமம் உள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. மஞ்சளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இது நரம்புகளில் கொழுப்புப் படிமம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மேலும் படிக்க | Prune For Health: அனீமியா, செரிமானக் கோளாறுகளை போக்கும் கொடிமுந்திரி!
குருமிளகு
ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் கருப்பு மிளகில் காணப்படுகின்றன, இது கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள கொழுப்பு செல்களை உடைக்க உதவுகிறது. மேலும், நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. இதனால், உடல் எடையும் தானாகவே குறையும்.
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு காம்பினேஷன்
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஜோடி சேர்ந்தால் அதிக கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அதனை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.
பச்சை மஞ்சள்
பச்சை மஞ்சள் மற்றும் முழு குருமிளகையும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இந்த மஞ்சள் குருமிளகு கசாயத்தை தொடர்ந்து பருகிவந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும். மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் நன்மை பயக்கும். இருப்பினும், நீங்கள் ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
(பொறுப்பு துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ளவை இயற்கையாகவே வீட்டில் கொழுப்பைக் குறைக்க உதவும் இந்திய உணவுக் குறிப்புகளின் பொதுவான கண்ணோட்டம் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் உணவு அல்லது வாழ்க்கை முறைகளில் ஏதேனும் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது முக்கியம்.)
மேலும் படிக்க | அதிக கால்சியமும் ஆபத்து தான்! தமனிகளில் கால்சியம் படிந்தால் என்ன ஆகும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ