கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே மக்கள் கடும் அவதிகளை சந்திப்பார்கள். முக்கியமாக வெயில் காரணமாக உடலில் உருவாகும் கட்டிகள் வீங்கி வலியை ஏற்படுத்தும். அதனை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களை வைத்து போக்கலாம்.
அதற்கான வழிமுறைகள்:
* இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கால் பாதங்கள், நகங்களின் மேற்பரப்புகளில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டால் அது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்த. அதனால் கட்டிகள் உருவாகுவதை தவிர்த்துவிடலாம்.
மேலும் படிக்க | வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடனே இவற்றை சாப்பிட வேண்டாம்; ஜாக்கிரதை
* தண்ணீரை அதிகம் பகிர வேண்டும். அதனால் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். அதனால் உடல் சூடாவது தவிர்த்து கட்டிகள் ஏற்படுவதும் நின்றுவிடும்.
* கட்டிகளை போக்க மற்றொரு வழி மஞ்சள். மஞ்சளை நன்றாக அரைத்து தண்ணீரில் கெட்டி பதத்துக்கு குழைத்துக்கொண்டு கட்டி இருக்கும் இடத்தில் பத்து போடலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இவ்வாறு செய்துவந்தால் சில நாட்களிலேயே கட்டிகளின் வீக்கம் குறையும்.
மேலும் படிக்க | அசைவத்தோடு சேர்த்து எதையெல்லாம் சாப்பிடக்கூடாது...
* அதேபோல் வேப்பிலையை நன்றாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவேண்டும்.
* கட்டிகளில் வீக்கம் அதிகமாக இருந்தால் கல் உப்பை பயன்படுத்தலாம். வாணலியில் கல் உப்பை கொட்டி லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதனை காட்டன் துணியில் சுருட்டி, கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் சீழ் பிடித்த கட்டிகளாக இருந்தால்கூட சரியாகிவிடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe