Liver Health: கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு. இது நமது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணவை ஜீரணிக்கவும் உதவுகிறது. உடலில் பல முக்கிய செயல்பாடுகளில் கல்லீரல் மிக உதவியாக இருக்கின்றது. ஆகையால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலின் பல செயல்பாடுகள் சீராக நடக்கும்.
பல இயற்கையான, எளிய வழிகளில் நாம் நமது கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். கல்லீரலின் சீரான செயலாக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கீரை வகைகள், காய்கறிகள்
வெந்தயக் கீரை, பாலக் கீரை, சர்சோன் கா சாக் எனப்படும் கடுகு கீரை உள்ளிட்ட கீரை வகைகள், பச்சை காய்கறிகள் ஆகியவை கல்லீரலுக்கு மிகவும் நல்லவையாக கருதப்படுகின்றன. கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்கள் அவற்றில் உள்ளன. கீரையில் இரும்புச்சத்தும் அதிக அளவில் உள்ளது. இது இரத்தத்திற்கு நல்லது. வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது வயிற்றின் சீரான செயல்பாட்டிற்கு நல்லது. கடுகு கீரையில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் அதிகமாக உள்ளது.
கேரட்
கேரட் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய காயாக பார்க்கப்பட்கின்றது. இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் கண்களுக்கும் நல்லது. நீங்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடலாம் அல்லது அதன் சாற்றை குடிக்கலாம். கேரட் ஜூஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது வயிற்றுக்கு நல்லதாக கருதப்படுகின்றது.
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு தினமும் குடிப்பதால் உடலின் நீர்ச்சத்து தேவை பூர்த்தியாகும். எலுமிச்சை நீரில் சிறிது தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இதன் சுவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இது கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது.
மேலும் படிக்க | மளமளனு எடை குறைய காலையில் இந்த சூப்பர் பானங்களை குடிங்க போதும்
இஞ்சி
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இஞ்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. இஞ்சி டீ குடிப்பதால் சளி மற்றும் இருமலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். தேநீர் தவிர, இஞ்சியை பல வித உணவுகளிலும் சேர்க்கலாம். கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இது பல வகைகளில் உதவுகின்றது.
மஞ்சள்
மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது உடலை பல வித நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இரவில் மஞ்சள் பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும். உங்கள் உணவிலும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். மஞ்சளில் இருக்கும் பண்புகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் உதவும். எனினும், இவற்றுடன் சமச்சீரான மற்றும் சத்துள்ள உணவும் கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )
மேலும் படிக்க | மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ