Guru Peyarchi Palangal: இன்னும் சில மாதங்களில் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபம்? யாருக்கு அதிர்ஷ்டம் அதிகமாகும்? குரு பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
Guru Peyarchi Palangal: கல்வி, செல்வம், திருமண வாழ்க்கை, குழந்தைகள், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
அனைத்து கிரகங்களும், ஜோதிட சாஸ்திரப்படி ஒரு குறிப்பிட்ட கால அளவில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சனி பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.
ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 14 ஆம் தேதி காலை 11:20 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். தற்போது ரிஷப ராசியில் உள்ள அவர் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம்: மிதுனத்தில் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு பழைய முதலீடுகள் லாபகரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். இதன் காரணமாக அவர்கள் தங்கள் கடனை எளிதாக திருப்பிச் செலுத்துவார்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு மே 14 ஆம் தேதிக்குப் பிறகு மகிழ்ச்சி மழையாய் பொழியும். குருவின் அருளால், மாணவர்களின் அறிவுத்திறன் வளரும். அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. பெரிய திட்டங்களிலிருந்து தொழிலதிபர்கள் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.
தனுசு: குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். பண வரவு அதிகமாகும். உங்கள் வாழ்க்கையில் புதிய சாதனைகளை செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.
மீனம்: குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும். அவர்களது ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் பிரிவினை நீங்கும். தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், சுகாதாரம், ஊடகம், மேலாண்மை மற்றும் கல்வித் துறைகளுடன் தொடர்புடையவர்களின் வருமானம் அதிகரிக்கும். சிறு வணிகர்களின் வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும்.
வியாழக்கிழமை குரு பகவானின் விசேஷ தினமாக கருதப்படுகின்றது. இந்த நாளில் கோயில்களில் குரு பகவானின் சன்னிதியில் விளக்கு ஏற்றி வேண்டினால் நினைத்த காரியம் கை கூடும்.
குழந்தைகள் படிப்பில் பிரகாசிக்கவும், குரு பகவானின் பரிபூரண அருள் பெறவுவும், 'குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற இந்த ஸ்லோகத்தை கூறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.