தொப்பையைக் குறைக்க பப்பாளியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்? இடுப்புச்சதையை குறைக்கும் பழம்!

How To Eat Papaya To Reduce Belly Fat: பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட வேண்டும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்கள் அனைவருக்கும் வழங்கும் பரிந்துரை. எந்த நோய் பாதிப்பு இருந்தாலும் பப்பாளி சாப்பிடலாம், அதிலும் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு பப்பாளி தான் பெஸ்ட் சாய்ஸ்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2024, 11:49 AM IST
  • எந்த நோய் பாதிப்பு இருந்தாலும் சாப்பிடக்கூடிய ஒரே பழம்
  • உடலுக்கு பலம் கொடுக்கும் பழம்
  • உடல் எடை குறைக்க பப்பாளி
தொப்பையைக் குறைக்க பப்பாளியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்? இடுப்புச்சதையை குறைக்கும் பழம்! title=

பப்பாளிப்பழம் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழமாகும், இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பாப்பைன் மற்றும் நார்ச்சத்து போன்ற கூறுகள் அதிக அளவில் இருக்கும் பப்பாளி சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தருகிறது. பப்பாளி பழத்தை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் இந்த 6 வழிகள் மிகவும் நன்மைத் தருபவை. இந்த வழிகளில் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், தொப்பை சட்டென்று குறையத் தொடங்கும்.

தொப்பையைக் குறைக்கும் பப்பாளி
பப்பாளியின் உதவியுடன் தொப்பையை குறைக்கலாம் என்பது அழகை கூட்ட நல்ல இனிப்பான வழியாக இருக்கும். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்குகிறது, இது எளிதில் வெளியேறாது. அதைக் குறைக்க எஎன்ன செய்தாலும், கூடும் வேகத்தில் குறைவது மட்டும் நடப்பதில்லை. எனவே தொப்பையை குறைக்க பப்பாளியை எப்படி சாப்பிடுவது? என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி
உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடுங்கள். இதை காலை உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். படிப்படியாக தொப்பையை குறைக்கும் பப்பாளி, உங்களை சுறுசுறுப்பாகவும் மாற்றும். பப்பாளியில் கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை கலந்தும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | அடாவடி யூரிக் அமிலத்தை அட்டகாசமாய் குறைக்க இந்த பானங்கள் குடிங்க

பப்பாளி சாறு
உடல் பருமனை குறைக்க நினைத்தால், உணவில் பப்பாளி சாற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். பப்பாளி ஜூஸ் குடிப்பதால் உடலில் சேரும் கொழுப்பு வேகமாக கரையும். பப்பாளியில் உள்ள சத்துக்கள் கொழுப்பை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பப்பாளி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பாலுடன் பப்பாளி
காலை உணவில் பப்பாளி மற்றும் பால் சிறந்த தேர்வாக இருக்கும். பால், பப்பாளி மற்றும் சில உலர் பழங்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். இந்த கலவையை உட்கொள்வதன் மூலம், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இது உங்களை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும், இது உடல் பருமனைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பப்பாளி மற்றும் தயிர்
பப்பாளி மற்றும் தயிர் எடை இழப்புக்கு நன்மை பயக்கும். சாப்பிட சுவையாக இருக்கும் பப்பாளி மற்றும் தயிர் சேர்ந்த காலை உணவு, கொழுப்பைக் கரைக்கவும் உதவுகின்றன. பப்பாளியை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும். இதற்கு பப்பாளி, தயிர் மற்றும் உலர் பழங்களை நன்கு கலந்து சாப்பிடவும். இது உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். இது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

பப்பாளி ஸ்மூத்தி 
வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை விரைவாகக் கரைக்க, பப்பாளி ஸ்மூத்தி செய்தும் சாப்பிடலாம். இதற்கு பப்பாளி, தயிர், பழங்கள் சேர்த்து ஸ்மூத்தி செய்து தினமும் குடிக்கவும். உடல் எடையை குறைப்பதோடு, நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

பப்பாளி சாட் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதற்கு பப்பாளி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி சேர்த்து சாட் செய்து சாப்பிடவும். சத்துக்கள் நிறைந்த பப்பாளி சாட்டை சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதோடு, முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுத்தப்பட்ட தகவல் என்பதால் உங்கள் உடல்நலம் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்... டாக்டர் சொல்வதைக் கேளுங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News