Healthy Dinner Tips: நாள் முழுவதும் நீங்கள் சில ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை பின்பற்றினால்தான் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். காலை உணவு தொடங்கி இரவு வரை ஒரு ஒழுங்கை நீங்கள் கடைபிடித்தாக வேண்டும். ஒரு பொழுது மட்டும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டாலும் அந்த ஆரோக்கிய சங்கிலி அறுபட்டுவிடும்.
எனவே நீங்கள் நாள் முழுவதும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையும், சரியான அளவிலான உணவுகளையும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனை தொடர்ச்சியாக செய்தால் மிதமான வேகத்தில் நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம். உணவுப்பழக்கம் மட்டுமின்றி வேறு சில விஷயங்களையும் செய்தால்தான் உடல் எடை குறைப்பில் பலன் கிடைக்கும்.
Dinner Tips: இரவு உணவில் நாம் செய்யும் பொதுவான தவறுகள்
அந்த வகையில், ஒரு நாளின் கடைசி உணவான, இரவு உணவும் உடலுக்கு மிக முக்கியமானதாகும். நீங்கள் இரவு உணவிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். உடல் எடை குறைப்பில் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அது நல்லது எனலாம். அப்படியிருக்க, நீங்கள் இரவு உணவில் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பெரியளவில் உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம். அந்த வகையில், இரவு உணவில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
Dinner Tips: புரதம் இல்லாத உணவை சாப்பிடுவது தவறு
பலரும் இரவில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறார்கள். நீங்கள் இரவு உணவில் புரதத்தை எடுத்துக்கொள்ளாவிட்டால், வயிறு நிறைந்த உணவு ஏற்படாது. இதனால் நடுராத்திரியில் பசி எடுக்கும், தேவையற்ற நேரத்தில் உணவு உண்பீர்கள். புரதம் இல்லாமல் வளர்ச்சிதை மாற்றம் குறையும், இதனால் உடல் எடை குறைப்பதும் கடினமாகும்.
Dinner Tips: தாமதமாக சாப்பிடுவது தவறு
அதாவது, இதுதான் முதன்மையான தவறும் கூட... எப்போதும் இரவு 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது. அதிகபட்சம் 9 மணி. அதாவது நீங்கள் தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் குறைந்தது 2 மணிநேரம் இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு பின் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். வேலை இருந்தாலோ, நண்பர்களுடன் வெளியில் செல்கிறீர்கள் என்றாலோ 9 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளை பாருங்கள். தாமதமாக இரவு உணவை சாப்பிடுவதால் செரிமானம் சார்ந்த பிரச்னைகள் கூட வரலாம்.
Dinner Tips: நார்ச்சத்தை தவிர்ப்பது தவறு
இரவில் காய்கறிகள் அற்ற, நார்ச்சத்தே இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். காய்கறிகளில் வைட்டமிண்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. அதிக கலோரிகளை கொண்ட உணவுகளுக்கு காய்கறி நல்ல மாற்றாக இருக்கும். அதே நேரத்தில் நார்ச்சத்து அதிகம் இறுக்கும் காய்கறிகள், கீரைகளை இரவில் சாப்பிட வேண்டும். இதனை தவிர்த்தால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும், செரிமான அமைப்பும் மோசமாகும்.
Dinner Tips: அதிக இனிப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது தவறு
அதிக ரீபைன்ட் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். உடலில் கொழுப்புகள் தேக்கமடையும். அதாவது, பாஸ்தா, பிஸ்கட்டுகள், வெள்ளை அரிசி, வெள்ளை பிரேட், இனிப்புகள், பீர் போன்றவைதான் ரீபைன்ட் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் ஆகும், இவற்றை இரவில் தவிர்த்துவிடுங்கள். அதே நேரத்தில் அதிகளவு இனிப்புகள் கொண்ட உணவுகளையும் இரவில் தவிர்க்கவும். அவற்றில் குறைவான நார்ச்சத்து மற்றும் குறைவான ஊட்டச்சத்துக்களே இருக்கும். மேலும் விரைவாகவே பசி எடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை சுலபமாய் குறைக்க இந்த பழங்களை தோலுடன் சாப்பிடலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ