Health Tips: நமது சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் சமையலின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன. உணவின் சுவையையும், நறுமணத்தையும், குணத்தையும் மேம்படுத்துவதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானது. பல வகையான மசாலாக்களால் உருவாக்கப்படும் பண்டங்கள் நம் பசித்த வயிற்றுக்கு விருந்தாகின்றன. நாம் பயன்படுத்தும் மசாலாக்களில் மிளகும் ஒன்றாகும். உணவின் சுவையை அதிகரிப்பதுடன் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. மிளகின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
கருப்பு மிளகு
இந்தியாவில், பழங்காலத்திலிருந்தே மருந்துகளுக்கு மாற்று மருந்தாக மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல நோய்களைக் குணப்படுத்த மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படும் கருப்பு மிளகில் (Black Pepper) சில மருத்துவ கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டாறியப்பட்டுள்ளது. அதாவது அவை உடலின் செல்களைப் பாதுகாக்கின்றன. மேலும், கருப்பு மிளகு இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகின்றன. இது இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
ஊட்டச்சத்துகள் நிறைந்த மிளகு
கருப்பு மிளகில் (Pepper) பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, ஈ, சி ஆகியவையும் கருமிளகில் உள்ளன. இதுமட்டுமின்றி, கருப்பு மிளகு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்று அழைக்கப்படும் சில கூறுகளையும் கொண்டுள்ளது. அவை நமது செல்களைப் பாதுகாக்கின்றன. இதன் காரணமாக கருப்பு மிளகு பல நோய்களை சரி செய்ய உதவுகிறது. மேலும், இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, தொண்டை வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. கருப்பு மிளகை சாப்பிடுவதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
மேலும் படிக்க | உடல் எடையை வேகமா குறைக்க... பக்க விளைவுகள் இல்லாத அட்டகாசமான வீட்டு வைத்தியம்
உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்
உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்பது இந்நாட்களில் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது பெரும்பாலும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் கருப்பு மிளகு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ஒரு பாதுகாப்பான மற்றும் இயற்கையான வழியாகும். கருப்பு மிளகில் உள்ள 'பைப்பரின்' என்ற வேதிப்பொருள், தமனிகளைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை சீராகப் பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு சோடியத்தின் சமநிலையையும் பராமரிக்கிறது. இதை தினமும் உபயோகித்தால், சில நாட்களில் பலன் தெரிய ஆரம்பிக்கும்.
மிளகை எப்படி பயன்படுத்துவது?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 முதல் 2 பொடித்த கருப்பு மிளகுத்தூள் கலக்கவும். உங்கள் நாவில் தாங்கும் அளவில் அல்லது வெதுவெதுப்பான நீரையும் பயன்படுத்தலாம். இந்த நீரில் மிளகு பொடியை கலக்கி குடிக்கவும். கருப்பு மிளகு மற்றும் வெந்நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
கருப்பு மிளகின் பிற நன்மைகள்:
- கருப்பு மிளகு புற்றுநோயைத் தடுக்கிறது.
- செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
- சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை பொன்னாங்கண்ணி! "கீரைகளின் ராணி"
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ