முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் மூலம் செய்யப்படும் ஹேர் மாஸ்க் நன்மைகள்: கூந்தல் நம் அழகின் முக்கிய பகுதியாகும். இன்றைய காலக்கட்டத்தில் தவறான உணவுப்பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் கூந்தல் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். கூந்தல் உதிர்தல், கூந்தல் உடைதல், வலுவிழத்தல் போன்ற பிரச்சனைகள் சகஜமாகிவிட்டன. மறுபுறம், இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க மக்கள் பல்வேறு வகையான கூந்தல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
எனினும், இவை கூந்தலின் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும். இவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. மறுபுறம், நாம் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், அதற்கு நிவாரணம் அளிக்க பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. கூந்தல் பராமரிப்பில் முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெயால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையை வைத்து எப்படி ஹேர் மாஸ்க் செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க்கை கூந்தலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்:
பொடுகை போக்க:
உங்கள் கூந்தல் வலுவிழந்து, உங்கள் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகு இருந்தால், இந்த பேக் உங்களுக்கு ஒரு மருந்துக்கு நிகரானதாக இருக்கும். முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெயால் செய்யப்பட்ட இந்த ஹேர் மாஸ்க் மூலம் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். இதைப் பயன்படுத்திய பிறகு, உங்கள் தலையை கைகளால் லேசாக மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
மேலும் படிக்க | சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்; கட்டாயம் சாப்பிடுங்க
முடி உதிர்வது நின்றுவிடும்
இந்த ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடியை வலுவாக மாற்ற உதவுகிறது. அதே சமயம், முட்டையில் உள்ள புரதம் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆகையால், முடி உதிர்தலால் உங்களுக்கும் தொந்தரவு இருந்தால், நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்.
வறண்ட முடி பிரச்சனையை குறைக்கும்
இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துவதால் கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைக்கும். இது கூந்தலுக்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடிக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைத்து, முடி வறட்சியும் நீங்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உதட்டின் கருமையால் பிரச்சனையா? மிருதுவான, பிங்க் லிப்ஸ் பெற எளிய டிப்ஸ்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ