காதலர் தினத்தன்று வெளியாகும் 7 படங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க..

Tamil Movies Releasing On February 14th Valentines Day : காதலர் தினம் வரும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 7 தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

Tamil Movies Releasing On February 14th Valentines Day : தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஏதாவது ஒரு பெரிய நாள் வரும் போது அந்த நாளில் பல படங்களில் ரிலீஸ் செய்வர். அந்த வகையில், வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, அந்த நாளில் சில படங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்கிற லிஸ்டை இங்கு பார்ப்போம்.

1 /7

ஜாம்பவான் நடிகர்களுள் ஒருவரான கவுண்டமணி பல நாட்களுக்கு பிறகு கம்-பேக் கொடுத்திருக்கும் படம் ஒத்த ஓட்டு முத்தையா. இதில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இந்த படம், வரும் 14ஆம் தேதி வெளியாகிறது.

2 /7

சாந்தினி கவுர், மாயா கிளம்மி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கண்நீரா. இந்த படத்தை மலேசிய வாழ் தமிழரான கதிரவன் இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்தையும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று தியேட்டரில் பார்க்கலாம்.

3 /7

ஸ்ரீகாந்த், பல நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றும் படம் தினசரி. இந்த படத்தின் தயாரிப்பாளரான சிந்தியா லூர்ட்தே என்பவர் இதில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தை காதலர் தினத்தன்று திரையரங்குகளில் பார்க்கலாம்.

4 /7

லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், காதல் என்பது பொதுவுடைமை. இந்திய சினிமாக்களில் பெரும்பாலும் பேசப்படாத டாப்பிக், ‘தன் பாலின ஈர்ப்பு’. இதை கதையில் கருவாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 

5 /7

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 2கே லவ் ஸ்டோரி. இந்த படத்தில் ஜெகவீர என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகியிஉக்கிறார். வினோதினி, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். 2கே இளசுகளின் காதலை கூறும் வகையில் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. இதனை திரையரங்குகளில் வரும் பிப்., 14ஆம் தேதியன்று பார்க்கலாம்.

6 /7

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள், ரச்சித்தா மகாலட்சுமி மற்றும் பாலாஜி முருகதாஸ். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஃபயர் எனும் படத்தில் நடித்திருக்கின்றானர். இந்த படம் வரும் பிப்., 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

7 /7

மார்வெல் படைப்பாக உருவாகியிருக்கிறது, கேப்டன் அமெரிக்கா தி நியூ வேர்ல்ட். இந்த படத்தில் ஆந்தனி மேக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படமும் பிப்., 14 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.