பல இடங்களிலும் பலருக்கும் புத்துணர்வை ஊட்டும் பானமாக இருப்பது தேநீர் தான், ஆசியா, யுனைடெட் கிங்டம், கனடா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் என பெரும்பாலான மக்கள் தேநீருக்கு அடிமையாகி இருக்கின்றனர். பெரும்பாலான மக்களுக்கு பாலில் தயாரிக்கப்படும் தேநீர் தான் விருப்பமானதாக இருக்கிறது, அதேசமயம் இப்போது பெரும்பாலான இளைஞர்களிடையே க்ரீன் டீ மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. உடற்பயிற்சி செய்பவர்களிடமும் க்ரீன் டீ பிரபலமாக இருந்து வருகிறது, இப்போது எந்த தேநீர் சிறந்தது என்பது பற்றி நாம் இங்கே பார்ப்போம். க்ரீன் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது, இதிலுள்ள மூல பொருட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக இருந்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதேசமயம் நமது உடலிலுள்ள செல்கள் ஆக்ஸிஜனேற்றத்தை உறிஞ்சுவதை பால் தடுக்கிறது, காலையில் பால் கலந்த தேநீரை குடிப்பதை விட க்ரீன் டீ குடிப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குச்சிக் கிழங்கை இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி
தேநீரில் காஃபின் உள்ளது, அதனால் நீங்கள் தேநீரை விடுத்தது காபிக்கு செல்லும் வேலையை செய்யாதீர்கள், காபியை விட தேநீர் நல்லது என்று கூறப்படுகிறது. பால் கலந்து தயாரிக்கப்படும் ஒரு கப் தேநீரில் 30mg-60mg அளவு காஃபின் உள்ளது என்று கூறப்படுகிறது. அதிகளவு பால் கலந்த டீ குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கலாம். அதனால் ஒரு நாளைக்கு 1-2 கப் தேநீர் மட்டும் சாப்பிடுங்கள் அதற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல, அதேசமயம் பால் சேர்க்காமல் பிளாக் டீயாக குடிப்பது நல்லது, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். கிரீன் டீயில் நல்ல அளவு ஃவுளூரைடுகள் உள்ளது, இது உங்களது எலும்புகள் மற்றும் பற்களுக்கு பலம் சேர்க்கிறது. அதுவே நீங்கள் தேநீரில் பாலை சேர்த்தால் ஃவுளூரைடுகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
கிரீன் டீ குடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் இரண்டும் மேம்படுகிறது. தினமும் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது மற்றும் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. கிரீன் டீ குடிப்பதால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை குறைகிறது. வெறும் தண்ணீரில் தேயிலை கலந்து குடிப்பது நல்லது, அதில் கலோரி குறைவாக இருக்கும். ஆனால் அதில் பால் சேர்க்கும்போது தேநீரின் முழுமையான பலனை நம்மால் பெற முடியாமல் போய்விடுகிறது, அதனால் பால் கலந்து தயாரிக்கப்படும் தேநீரை விடவும் க்ரீன் டீ அதிக நன்மைகளை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ