உடல் எடையை குறைக்க... இந்த முட்டாள்தனத்தை செய்யாதீர்கள் - பெரிய பின்விளைவுகள் வரும்

Skipping Dinner Side Effects: உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு ஏற்படும் முக்கிய பின்விளைவுகளை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 24, 2025, 11:53 AM IST
  • உணவை தவிர்ப்பது எப்போதுமே சரியான முடிவல்ல.
  • குறைவான அளவில் சாப்பிடலாம், ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படாது.
  • உடல் எடையை குறைக்க உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
உடல் எடையை குறைக்க... இந்த முட்டாள்தனத்தை செய்யாதீர்கள் - பெரிய பின்விளைவுகள் வரும் title=

Skipping Dinner Side Effects: உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள், தீவிரமான உடற்பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்வார்கள். எனினும், உங்களது உடல்நிலையை பரிசோதித்து அதற்கேற்பவே மருத்துவ ஆலோசனையின் படி உடல் எடை குறைப்பில் இறங்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

Health Tips: இரவு உணவை தவிர்ப்பதால் வரும் பின்விளைவுகள்

அந்த வகையில், பலரும் உடல் எடையை குறைக்க சாப்பாட்டை தியாகம் செய்வதை ஒரு வழியாக வைத்திருக்கிறார்கள். அதாவது, காலை உணவை சாப்பிடாமல் இருப்பது இல்லையெனில் இரவு உணவை சாப்பிடாமல் தூங்கச் செல்வது உள்ளிட்ட பழக்கங்களை வைத்திருப்பார்கள். உடல் எடை குறைப்புக்கு இது உதவாவது என்றும் பெரும்பாலும் உடல்நிலையை இது மோசமாக்கும் என்றே மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் உடல் எடையை குறைப்பதற்காக இரவு உணவை சாப்பிடாமல், வெறும் வயிற்றுடன் பட்டினியாக தினமும் தூங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு உடல்நிலை ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சாப்பிடாமல் இருப்பது போன்ற முறையற்ற பழக்கவழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

Skipping Dinner Side Effects: முறையான தூக்க சுழற்சி இருக்காது

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்க சுழற்சி மிக முக்கியம். அதாவது தினமும் இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்கு எழுந்திருப்பது ஒரு நல்ல பழக்கவழக்கம். ஆனால், நீங்கள் சாப்பிடாமல் இருப்பது மூலம், தாமதமாக தூங்குவதும், தாமதமாக எழுந்திருப்பதும் வாடிக்கையாகிவிடும். இதனால், எப்போதும் மந்தமாகவே இருப்பீர்கள். மேலும் தொடர்ச்சியாக நடந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகி, மனச்சிக்கல் ஏற்படும், ஆற்றல் குறைவாக இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

Skipping Dinner Side Effects: தேவையற்ற நேரத்தில் பசியெடுக்கும்

இரவு சாப்பிடாமல் தூங்குவதால் அடுத்து தேவையற்ற நேரங்களில் பசியெடுக்கும், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். இதனால், அதிக கலோரிகளை உட்கொள்வீர்கள். இது நீண்ட காலம் நடந்தால் உடல்நிலை மேலும் மோசகமாகலாம்.

Skipping Dinner Side Effects: ஊட்டச்சத்து குறைபாடு

உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் இரவு உணவு முக்கிய பங்கை வகிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இது முக்கியமான ஒன்றாகும். அப்படியிருக்க இரவு உணவை தவிர்ப்பதன் மூலம் உடலுக்கு தேவையான போதிய வைட்டமிண்கள், கனிமனங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடல் இயக்கத்திற்கு முக்கியமானதாகும். இதில் குறைப்பாடு ஏற்பட்டால் உடல்நிலை மோசமாகலாம்.

Skipping Dinner Side Effects: ரத்த சர்க்கரை அளவில் தாக்கம்

அதாவது, நீங்கள் இரவு உணவை தொடர்ந்து தவிர்த்து வருவது ரத்த சர்க்கரை அளவை ஏற்றஇறக்கத்திலேயே வைத்திருக்கும். இதன் சமநிலை தவறும். இதபோன்று ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரித்தால் அது நீரிழிவு நோய்க்கும் இட்டுச்செல்லலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவானவை ஆகும். இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil  News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | மூளை ஆரோக்கியம் முதல் மூட்டு வலி வரை... ஆச்சர்யங்களை கொடுக்கும் வாழைக்காய்

மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்

மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News