நீரிழிவு நோயில் தவிர்க்க வேண்டிய பழங்கள்: நீரிழிவு நோயாளிகளின் மிகப்பெரிய சவால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுக்குள் வைத்திருப்பதுதான். இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்தால், நீரிழிவு நோயை ஒருபோதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இந்த நோய் இருப்பதைப் பற்றி ஒருவர் அறிந்தவுடன், அவர் முதலில் செய்ய வேண்டியது, தனது உணவுப் பழக்கங்களை நீரிழிவு நோய்க்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதாகும்.
நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட கூடாது. இப்படிப்பட்ட உணவுகளின் காரணமாக சர்க்கரை அளவு அதிகமாகிறது. நீரிழிவு நோயாளிகள் எதை சப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்ற சந்தேகம் பலருக்கு இருந்துகொண்டே இருக்கும். பழங்களை உட்கொள்ளும் போதும் இந்த குழப்பம் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல வகையான பழங்களை சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் பழங்கள்
சர்க்கரை நோய் வருவதற்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே முக்கிய காரணமாகும். உணவின் மூலம் உடலில் சர்க்கரை அதிகமாக சேர்ந்தால், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய சூழ்நிலையில், அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு 70 முதல் 100 வரை இருந்தால், அத்தகைய பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக சர்க்கரை அளவு உள்ளது என்று பொருள். சர்க்கரை நோய் இருந்தால் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ளக் கூடாது.
மேலும் படிக்க | உடலில் சர்க்கரை அளவு குறைந்திருப்பதை கண்டுபிடிக்க வழிகள்!
எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது?
தர்பூசணி, உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சை, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் போன்ற இனிப்புப் பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
எந்த பழங்களை உண்ணலாம்?
பிளம்ஸ், கிவி மற்றும் ஜாமூன்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு அளவைக் கொண்டுள்ளன. இந்த பழங்களை சாப்பிடலாம்.
பழங்களை எந்த அளவில் சாப்பிடலாம்?
பழங்கள் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன என்று பொதுவாக நாம் கருதுகிறோம். ஆகையால் நீரிழிவு நோயாளிகள் அவற்றை முற்றிலும் தவிர்க்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. அதிக சர்க்கரை கொண்ட பழங்களை சரியான அளவில் சாப்பிட்டால், அவை தீங்கு விளைவிக்காது. மாறாக நன்மை பயக்கும். இருப்பினும், இது உங்கள் சர்க்கரை அளவையும் சார்ந்துள்ளது. எனவே நீரிழிவு நோயில் எந்தவொரு உணவையும் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இவற்றை உட்கொள்வதையும் தவிர்க்கவும்
இந்த பழங்களைத் தவிர, குளிர் பானங்கள், வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் உருளைக்கிழங்குகளில் அதிக கிளைசெமிக் குறியீட்டு அளவைக் கொண்டுள்ளன. ஏனெனில் கிளைசெமிக் குறியீட்டுடன் கூடுதலாக, அதிக கார்போஹைட்ரேட் அளவு கொண்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழம், திராட்சை, ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Herb for Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் ‘சர்க்கரை கொல்லி’!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ